700 மதுபாட்டில்கள் கடத்திய வாலிபர் கைது மற்றொருவருக்கு வலைவீச்சு
பொறையாறு அருகே 700 மதுபாட்டில்கள் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
பொறையாறு,
நாகை மாவட்டம், பொறையாறு அருகே தேவானூர் நண்டலாறு பாலம் அருகே நேற்று அதிகாலை 4 மணி அளவில் பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகவேல், சப்-இன்ஸ்பெக்டர் கலியமூர்த்தி, பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் அருள்குமார், ஏட்டு குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரைக்காலில் இருந்து பொறையாரை நோக்கி மோட்டார் சைக்கிள்களில் வந்த 2 பேர் போலீசாரை கண்டதும், மோட்டார் சைக்கிளை அந்த இடத்திலேயே போட்டுவிட்டு வயல்வெளியில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மற்றொருவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர், சீர்காழி தென்னலங்குடி சிவன்கோவில் பகுதியை சேர்ந்த மணிமாறன் (வயது 22) என்பது தெரியவந்தது. மேலும், அவர்களது மோட்டார் சைக்கிள்களை சோதனை செய்தபோது, அதில் 700 மதுபாட்டில்களை கடத்தி சென்றது தெரியவந்தது. உடனே போலீசார், மதுபாட்டில்களையும், 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் தொடர்பாக மணிமாறனை கைது செய்தனர். மேலும், தப்பி ஓடிய சீர்காழி பள்ளிக்கூட தெருவை சேர்ந்த விக்னேஷ் என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story