எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் 36 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் தகவல்


எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் 36 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 13 Aug 2017 4:00 AM IST (Updated: 13 Aug 2017 2:39 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் 36 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது என விழா அரங்கை ஆய்வு செய்த அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

திருவாரூர்,

திருவாரூர் வன்மீகாபுரத்தில் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா வருகிற 19-ந்தேதி நடக்கிறது. விழாவிற்காக பிரமாண்டமான அரங்கம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை அமைச்சர் காமராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது விழா அரங்கம், பார்வையாளர் அமரும் இடம், அங்கு நடைபெற்று வரும்் சாலை பணிகளை பார்வையிட்டு விரைவாக முடிக்க உத்தரவிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவினை ஆண்டு முழுவதும் வெகு விமர்சையாக நடத்தப்படும் என சட்டமன்றத்தில் அறிவித்தார். அதன்படி தமிழக அரசின் சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நலத்திட்ட உதவிகள்

திருவாரூர் மாவட்டத்தில் வருகிற 19-ந்தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. விழாவிற்காக திருவாரூர் வன்மீகாபுரத்தில் 1 லட்சம் சதுர அடி பரப்பளவில் விழா அம்மா அரங்கம் மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு வருகிறது.

மேலும் விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு 35 ஆயிரத்து 918 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். விழாவில் அனைத்து துறை அமைச்சர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ், கோபால் எம்.பி, மாவட்ட வருவாய் அதிகாரி சக்திமணி, நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ரவிச்சந்திரன், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆசைமணி, உதவி கலெக்டர் முத்துமீனாட்சி, துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமாறன், கூட்டுறவு சங்க தலைவர்கள் மூர்த்தி, கலிய பெருமாள் உள்பட பலர் உடனிருந்தனர். 

Next Story