கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் எடுக்கும் பணி தொடரும் ஓ.என்.ஜி.சி. நிறுவன அதிகாரிகள் பேட்டி
கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் எடுக்கும் பணிகள் தொடரும் என்று, ஓ.என்.ஜி.சி. நிறுவன அதிகாரிகள் கூறினர்.
கும்பகோணம்,
கும்பகோணத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று ஓ.என்.ஜி.சி. விழிப்புணர்வு பிரசார குறுந்தகடு வெளியிடும் விழா நடைபெற்றது. குறுந்தகட்டை ஓ.என்.ஜி.சி. செயல்இயக்குனர் குல்பீர்சிங் வெளியிட, முதன்மை பொது மேலாளர் ராஜேந்திரன் பெற்றுக் கொண்டார். பின்னர் ஓ.என்.ஜி.சி. செயல் இயக்குனர் குல்பீர்சிங் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஓ.என்.ஜி.சி. நிறுவனம் இந்திய அரசின் பொது நிறுவனமாகும். இந்த நிறுவனம் தமிழகத்தில் காவிரி படுகையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. இதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த நிறுவனத்தின் சார்பில் கதிராமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கச்சா எண்ணெய் பூமிக்கு அடியில் இருந்து உறிஞ்சப்பட்டு வருகிறது. இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு “குத்தாலம் 35“ என்ற எண்ணெய் கிணறு அருகே கசிவு ஏற்பட்டு அன்றைய தினம் மாலையே கசிவு சரி செய்யப்பட்டது. இதுதொடர்பாக போலீஸ் துறையில் தொடரப்பட்ட வழக்கை திரும்ப பெறும் எண்ணம் இல்லை. கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் எடுக்கும் பணி தொடரும். ஆந்திராவின் கோதாவரி நதிக்கரையிலும் குஜராத்தின் நர்மதை நதிக்கரையிலும் கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பல ஆண்டுகளுக்கு முன் ஆய்வு செய்யப்பட்ட 110 இடங்களில் தான் எண்ணெய் கிணறு அமைக்கப்பட உள்ளது. புதிய இடங்களில் எண்ணெய் கிணறு அமைக்கப்படவில்லை. நாகை, கடலூர் மாவட்டங்களில் பெட்ரோலிய ரசாயன மண்டலம் அமைக்கப்பட உள்ளதற்கும் ஓ.என்.ஜி.சி.க்கும் எந்த தொடர்பும் இல்லை. ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தமிழகத்தில் மீத்தேன், ஷேல்கியாஸ் போன்ற எந்த திட்ட பணிகளிலும் இதுவரை ஈடுபடவில்லை. தமிழகத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் மீது பொதுமக்களுக்கு வெறுப்பு ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் செய்திகளை நிறுத்தி கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கதிராமங்கலத்தில் அமைதி நிலவ அங்குள்ள மக்களிடம் விரைவில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்படும்.
கதிராமங்கலத்தில் சமூக சேவை திட்டத்தின் கீழ் குடிநீர் பணிகள் வழங்கப்பட்டு வருகிறது. கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் நிலத்தடி நீர் பாதிக்கப்படவில்லை. நிலத்தடி நீரின் தரமும் குறையவில்லை. எங்கள் ஆய்வு மீண்டும் இதை உறுதி செய்துள்ளது. கதிராமங்கலத்தில் எண்ணெய் குழாய் உடைப்பு ஏற்பட்டது குறித்து ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தொடர்பாக பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். பொதுமக்களுக்கு ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் எந்த பாதிப்பும் இல்லை என்பதை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு பிரசாரம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இந்த பிரசாரம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து ஓ.என்.ஜி.சி. முதன்மை பொது மேலாளர் ராஜேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
அண்மை காலமாக ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக பொதுமக்களிடம் பல்வேறு அவதூறு கருத்துக்கள் திணிக்கப்பட்டு வருகிறது. ஓ.என்.ஜி.சி.யின் செயல்பாடுகள் மற்றும் சமுதாய பங்களிப்பை பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்லவும், ஓ.என்.ஜி.சி.யைப்பற்றி தெளிவான புரிதலை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக வானொலி மூலமாக விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும்.
ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மக்களின் மகிழ்ச்சிக்காக உழைப்பது போல் இயற்கை மற்றும் சுற்றுசூழல் மீது மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. அதன் காரணமாகவே சர்வதேச தர நிர்ணய கழகத்தின் சான்றிதழின் அடிப்படையில், இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனத்துறை, சுரங்கத்துறை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளின் படி இயற்கைக்கு பாதுகாப்பாக இயங்குகிறது. ஒ.என்.ஜி.சி. நிறுவனம் மக்கள் நலனிலும் அதிக அக்கறை கொண்டுள்ளது. இதற்காக 7 ஆண்டுகளில் சுமார் ரூ.25 கோடி செலவிடப்பட்டுள்ளது.
கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் தமிழக அரசுக்கு ரூ.2,824 கோடி ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த நிறுவனம் பல இடங்களில் இயங்குவதை போல், கதிராமங்கலத்திலும் இயங்கி வருகிறது. எனவே கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் எடுக்கும் பணி தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story