காரில் கடத்தப்பட்ட 450 லிட்டர் ரே‌ஷன் மண்எண்ணெய் பறிமுதல்


காரில் கடத்தப்பட்ட 450 லிட்டர் ரே‌ஷன் மண்எண்ணெய் பறிமுதல்
x
தினத்தந்தி 13 Aug 2017 4:30 AM IST (Updated: 13 Aug 2017 2:42 AM IST)
t-max-icont-min-icon

அழகியமண்டபம் அருகே காரில் கடத்தி செல்லப்பட்ட 450 லிட்டர் ரே‌ஷன் மண்எண்ணெய்யை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அழகியமண்டபம்,

குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரே‌ஷன் அரிசி மற்றும் மண்எண்ணெய் கடத்தப்பட்டு வருகிறது. இதை தடுக்க வருவாய் அதிகாரிகள் தினமும் வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு கடத்தலை தடுத்து வருகிறார்கள்.

இந்தநிலையில்  நேற்று முன்தினம் இரவு மாவட்ட பறக்கும் படை தாசில்தார் ராஜசேகர், துணை தாசில்தார் சந்திரசேகர், வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், டிரைவர் ஜான்பிரைட் ஆகியோர் அழகியமண்டபம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக ஒரு கார் வந்தது. அதிகாரிகள் அதை நிறுத்தும்படி சைகை காட்டினர். ஆனால், அந்த கார் நிற்காமல் வேகமாக சென்றது.

உடனே அதிகாரிகள் அந்த காரைவிரட்டி சென்றனர். சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் விரட்டி சென்ற பின்பு பூவன்கோடு பகுதியில் அந்த காரை மடக்கி பிடித்தனர்.

உடனே டிரைவர் காரை நிறுத்தி விட்டு தப்பிஓடிவிட்டார். அதிகாரிகள் காரை சோதனை செய்த போது அதில் பிளாஸ்டிக் கேன்களில் 450 லிட்டர் ரே‌ஷன் மண்எண்ணெய் இருந்தது. அதனை பறிமுதல் செய்து மார்த்தாண்டத்தில் உள்ள மண்எண்ணெய் குடோனில் ஒப்படைத்தனர்.

மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் அதிகாரிகள் கைப்பற்றினர். ரே‌ஷன் மண்எண்ணெய் எங்கிருந்து யாருக்கு கடத்தி செல்லப்பட்டது என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story