ஆபரணங்களில் அழகிய முத்திரைகள்
“இன்றைய டீன்ஏஜ் பெண்கள் தங்கம், வெள்ளி ஆபரணங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பேஷன் நகைகளுக்கும் கொடுக்கிறார்கள்.
“இன்றைய டீன்ஏஜ் பெண்கள் தங்கம், வெள்ளி ஆபரணங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பேஷன் நகைகளுக்கும் கொடுக்கிறார்கள். அவைகள் அதிக மதிப்புமிக்கதாகவும், தனித்துவம் பெற்ற டிசைன்களை கொண்டவைகளாகவும் திகழ்வதுதான் அதற்கான காரணமாகும். இளம் பெண்களின் ரசனைக்கு ஏற்ற ஆபரண டிசைன் களை ஜெர்மன் சில்வரில் உருவாக்க முடியும்” என்கிறார், மாலினி.
சென்னை பட்டாளத்தை சேர்ந்த இவருடைய கைவண்ணங்களில் நெக்லஸ், பிரேஸ்லெட், கம்மல், தோடு, ஜிமிக்கி, மூக்குத்தி, வளையல், கொலுசு உள்ளிட்ட பல்வேறு விதமான ஆபரணங்கள் மாறுபட்ட வடிவமைப்பில் முத்திரை பதிக்கின்றன. செம்பு, நிக்கல், துத்தநாகம் உள்ளிட்ட உலோகங்களின் கலவையான ஜெர்மன் சில்வரில் விதவிதமான டிசைன்கள் கொண்ட ஆபரணங்களை வடிவமைக்கிறார்.
“இன்றைய இளம் பெண்கள் அடர்த்தியான நிறங்களை உள்ளடக்கிய ஆடைகளைவிட இளம் வண்ணங்களை பிரதி பலிக்கும் ஆடைகளையே விரும்பி அணிகிறார்கள். புடவைகள் மட்டுமின்றி சுடிதார், குர்தி, மேற்கத்திய ஆடைகளையும் விரும்பி உடுத்துகிறார்கள். அவை எல்லாவற்றிற்கும் பொருத்தமான ஆபரணங்களை தேடிப்பிடித்து வாங்குகிறார்கள். அவர்களுக்கு மன நிறைவை தேடிக்கொடுப்பவையாக ஜெர்மன் சில்வர் ஆபரணங்கள் அமைந்திருக்கின்றன. தங்க நகைகளைவிட சிறந்த டிசைன்களை இதில் உருவாக்கலாம். அதனால் உடுத்தும் ஆடைகளுக்கு பொருத்தமாக இந்த வகை ஆபரணங்களை அணியும்போது பெண்கள் கூடுதல் அழகாக ஜொலிக்கலாம். ஜெர்மன் வெள்ளி ஆபரணங்கள் கூடுதல் வேலைப்பாடுகளுடன் உருவாக்கப்படுகின்றன. ஜிமிக்கி என்றால் அது கூண்டுபோல் வட்ட வடிவமாகத்தான் இருக்க வேண்டும் என்ற நியதி இந்த நகைகளுக்கு கிடையாது. நம்முடைய விருப்பப்படி சதுரம், முக்கோணம், அரைவட்டமாக உருமாற்றம் செய்து கொள்ளலாம். பெண்களின் ரசனைக்கேற்ப வடிவமைப்பிலும், டிசைன்களிலும் வேறுபடுவது இந்த ஆபரணங்களுக்கு தனித்துவத்தை ஏற்படுத்தி கொடுக்கிறது” என்கிறார்.
மாலினியின் தாயார் சாந்தி பேஷன் நகை வடிவமைப்பில் ஆர்வம் கொண்டவர். அவரை பார்த்து சிறு வயதில் இருந்தே மாலினியும் பேஷன் நகைகளை உருவாக்க தொடங்கியிருக்கிறார்.
“எனது தாயார் வீட்டு வேலைகளை முடித்த பின்னர் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் பேஷன் நகைகளை வடிவமைத்துக் கொண்டிருப்பார். நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது என் தாயார் உருவாக்கிய பேஷன் நகைகளை அணிந்து செல்வேன். அதை பார்க்கும் தோழிகள், ‘இந்த டிசைனை நாங்கள் எங்கும் பார்த்ததில்லையே. நீ எங்கே வாங்கினாய்? இது போன்ற ஆபரணங்கள் எங்களுக்கும் தேவை. வாங்கித் தரமுடியுமா?’ என்று கேட்பார்கள். வீட்டுக்கு வந்ததும் எனது அம்மாவிடம் தோழிகளின் விருப்பத்தை கூறுவேன். தோழிகளுக்கு பரிசளிக்கும் நோக்கில் அம்மாவுடன் சேர்ந்து நானும் நகைகளை விதவிதமான டிசைன்களில் உருவாக்கத் தொடங்கினேன். அதை தோழிகளுக்கு வழங்கிவந்தேன்.
அதற்கு தோழிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால் மற்றவர்களை விட வித்தியாசமான கோணத்தில் நகைகளை உருவகப்படுத்தும் ஆர்வம் பெருகியது. கல்லூரி படிப்பின்போது என் ஆடைகளுக்கு பொருத்தமான நகைகளை நானே உருவாக்கினேன். அவைகளை அணிந்து செல்லும்போது என் கல்லூரித்தோழிகள் பாராட்டுவார்கள். அந்த பாராட்டுக்கள்தான் இந்த துறையில் என்னை வேகமாக வளர்த்தது” என்கிறார், மாலினி.
25 வயதான மாலினி என்ஜினீயரிங் படித்தவர். ஐ.டி. நிறுவனத்தில் பணி புரிந்தவர். பின்பு அந்த வேலையை விட்டுவிட்டு ஆபரண வடிவமைப்பில் ஆர்வம் காட்டி வருகிறார். அதற்கான காரணத்தை அவர் சொல் கிறார்!
“படித்து நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்பதுதான் என் விருப்பமாக இருந்தது. வேலை பார்க்கும் இடத்தில் அதிக நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கொடுக்கப்படும் ப்ராஜெக்ட்டை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செய்து முடிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் இருந்தது. அந்த காலக்கெடுவுக்குள் அதனை செய்து முடிக்க முடியாது என்பது அவர்களுக்கே தெரியும். ஆனாலும் முடித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டேன். அது பணி நேரம் தவிர மற்ற சமயங்களிலும் என் மனநிலையை வெகுவாக பாதித்தது. அதில் இருந்து மீள வேலையில் இருந்து விடுபட முடிவு செய்தேன். நாமே சுயமாக ஏதாவது தொழில் செய்வதுதான் மன அழுத்தமின்றி சுதந்திரமாக செயல்படுவதற்கான ஒரே வழி என்று தீர்மானித்தேன். அப்போதுதான் அம்மாவிடம் இருந்து கற்றுக்கொண்ட பேஷன் நகைகள் மீது முழு கவனத்தையும் பதிக்கலாம் என்ற சிந்தனை எழுந்தது. மற்றவர்களை விட நம்முடைய படைப்பு தனித்துவமாக தெரிய வேண்டும் என்ற எண்ணத்தில் ஜெர்மன் சில்வர் நகைகளை டிசைன் செய்ய தொடங்கினேன்” என்கிறார்.
மாலினி ஜெர்மன் சில்வர் மட்டுமின்றி விதவிதமான பேஷன் நகை டிசைன்களையும் உருவாக்குகிறார். இவரது படைப்புகளுக்கு நாடு கடந்து வரவேற்பு கிடைத்துள்ளது. வெளிநாட்டு வாழ் இந்தியர்களும், வெளிநாட்டினரும் விரும்பி வாங்கிக்கொண்டிருக் கிறார்கள்.
“நகை வடிவமைப்பில் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ளும் ஆர்வம் என் தேடலை அதிகப்படுத்தியது. எனது கற்பனை திறனை கூர்தீட்டி புதிது புதிதாக டிசைன் நகைகளை உருவாக்க தொடங்கினேன். கண்காட்சிகளில் என் படைப்புகளை காட்சிப்படுத்தினேன். அதற்கு இளம் பெண்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. இணையதளம் வழியாகவும் என் படைப்புகளை காட்சிப்படுத்தினேன். அதன் மூலம் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களையும் சென்றடைந்தது. அங்கு வசிப்பவர்கள் நாம் இங்கு கொண்டாடும் பண்டிகைகளை நமக்கு இணையாக உற்சாகமாக கொண்டாடி மகிழ்கிறார்கள். அந்த சமயங்களில் உடுத்தும் ஆடைகளும், அணியும் நகைகளும் மாறுபட்டு தெரியவேண்டும் என்று எதிர்பார்க் கிறார்கள். ஜெர்மன் சில்வர் நகைகள் அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதால் விரும்பி அணிகிறார்கள். அதை பார்த்து வெளிநாட்டினரும் இத்தகைய டிசைன் நகைகளை அணிவதற்கு விரும்புகிறார்கள். அவர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்ய நானும் விதவிதமான டிசைன் களில் பேஷன் நகைகளை உருவாக்குகிறேன். நகைகளுக்கான மூலப்பொருட்களை ஜெய்ப் பூரில் இருந்து வாங்குகிறேன். இங்கு கிடைப்பவைகளை விட அங்குள்ளவை என்னுடைய எதிர்பார்ப்புக்கேற்ப அமைந்திருக்கின்றன.
நகைகள் பார்க்க பெரியதாக தெரிய வேண்டும், ஆனால் எடை குறைவாக இருக்க வேண்டும் என்பதுதான் இளம் பெண்களின் எண்ணமாக இருக்கிறது. தங்கள் அபிமான நட்சத்திரங்கள் அணியும் ஆபரணங்கள் பார்க்க அழகாக இருந்தால் அதேபோன்ற டிசைன்களை விரும்பு கிறார்கள். அவர்களின் ரசனைக்கேற்பவும், மாறுபட்ட கண்ணோட்டத்திலும் உருவாக்கம் செய்வதற்கு கற்பனையும், ரசனையும் இருந்தால்போதும். இந்த ஆபரணங்களை உருவாக்குவது எளிது. மற்ற நகைகளை விட இந்த ஆபரணங்களில் துத்தநாகத்தின் பங்களிப்பு மிகவும் குறைவு. அதனால் தோல் அலர்ஜி போன்ற பிரச்சினைகளும்வராது. சுயதொழில் எனக்கு வெளி உலக அனுபவங்களை தந்திருக்கிறது. தொழில்ரீதியாக நிறைய தொடர்புகளையும் உருவாக்கித்தந்திருக்கிறது” என்கிறார், மாலினி.

Related Tags :
Next Story