9.இன்பமே இன்னும் வா-என்.சி. மோகன் தாஸ்
தலைக்கட்டு நமநமக்க கண்ணாடியின் முன்பு நின்று அதை மெல்ல அவிழ்த்து குப்பைக் கூடையில் போட்டாள். நெற்றியில் காயம் பட்ட இடம் பளிச்சென தெரிந்தது.
முன்கதை சுருக்கம்: மந்திரி ரத்னாகரின் பினாமி பெயரில் இயங்கும் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் மீது வெடிக்கும் ரசாயன பொருட்களை ஏற்றி வந்த லாரி மோதி கட்டிடத்திற்கு கடும் பாதிப்பும், உயிர் சேதமும் ஏற்படுகிறது. அந்த சமயத்தில் மீடியாவில் பணிபுரியும் சுவீகாவும், மணீசும் அந்த வழியாக காரில் சென்றதால் அவர்களும் விபத்தில் சிக்குகிறார்கள். இதில் சுவீகா காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுகிறாள். அவள் பக்கத்து படுக்கையில் சிகிச்சை பெற்று வந்த பெண், கிளனிங் வேலை செய்வது போல் உள்ளே புகுந்த கொலைகாரனால் கொலை செய்யப்படுகிறாள். ஆனால் மணீசும், சுவீகாவும் சேர்ந்து தான் அந்த பெண்ணை கொலை செய்ததாக போலீசார் சந்தேகப்படுகிறார்கள். மணீஷிடம் துருவித்துருவி டி.எஸ்.பி. விசாரிக்கிறார். யாரோ இதன் பின்னணியில் இருந்து இயக்குவதாக மணீசும், சுவீகாவும் சந்தேகப்படுகிறார்கள். கொலை செய்யப்பட்ட பெண்ணை தான் எங்கோ பார்த்ததாக சுவீகா சொல்கிறாள்.
சுவீகாவின் வீடு.
தலைக்கட்டு நமநமக்க கண்ணாடியின் முன்பு நின்று அதை மெல்ல அவிழ்த்து குப்பைக் கூடையில் போட்டாள். நெற்றியில் காயம் பட்ட இடம் பளிச்சென தெரிந்தது.
அடிபட்ட வலியும், வேதனையும் இன்னும் முழுதாக மாறவில்லை என்றாலும்கூட அந்த ஆஸ்பத்திரி வேண்டாம் என்று வீட்டுக்கு வந்து விட்டாள்.
பயம்.
வேறு எந்த மருத்துவமனைக்கும் போக தயக்கம். அதற்கு காரணம் அந்த டி.எஸ்.பி. சந்தோஷ்.
மனிதர்களை முதல் சந்திப்பில் எடைபோட்டு, இந்த ஆள் நல்லவன், இவன் கெட்டவன் என்று முடிவுசெய்து அதன் அடிப்படையிலேயே பழகுகிறோம். அந்த வகையில் டி.எஸ்.பி. சந்தோஷ் ஒரு கரடுமுரடு ரகம் என்றுதான் அவர்கள் நினைத்தார்கள்.
சுமாராய் படித்து வேறு வழியில்லாமல் போலீசில் சேர்ந்து குடும்பத்தை காப்பாற்ற வேண்டி அரசியல்வாதிகளுக்கு வளைந்து கொடுப்பவர்களை கூட மன்னித்து விடலாம்.
படித்து, பட்டம் பெற்று பெரும் பதவியில் இருக்கும் இவர் கூடவா இப்படி என்று அவர்கள் இருவருக்கும் ஆத்திரம் வந்தது. ஆனால்..
அன்று மருத்துவமனையில்-
இறந்துபோன அந்த பெண்ணின் உடலை வெளியே அனுப்பினதும், சந்தோஷ் மட்டும் திரும்ப அவர்களிடம் வந்தார். அப்போது அவரிடம் பெரிய மாற்றம். முகத்தில் கனிவு.
அவர்களுக்கு எதுவும் விளங்கவில்லை. முன்பு கர்ண கடூரமாய் விசாரித்தவர், புரட்டிப்போட்டு அன்பாய் கவிழ்கப்போகிறாரோ?
“சாரி மணீஷ்.. சுவீகா, மன்னிக்கணும்! சூழ்நிலை காரணமாய் நான் உங்களிடம் அப்படி குரூரமாய் நடந்துக்க வேண்டியதாயிற்று. நான் அந்த மாதிரி ஆள் இல்லை. அந்த மாதிரி போலீசும் இல்லை. நீங்க நிரபராதின்னு எனக்குத் தெரியும். உங்களோட சில பீச்சர்களை டி.வி.யில் கண்டு ரசித்திருக்கிறேன்.
அவற்றில் இருந்த யதார்த்தம், சமூக அக்கறை நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. உங்களுக்கோ, உங்களின் படைப்புகளுக்கோ எந்த இடைஞ்சலும் வந்து விடக்கூடாது! உண்மை என்னாங்கிறதை நீங்க புரிஞ்சுக்கணும். அதுக்காகத்தான் திரும்ப இப்போ வந்தேன்.
ஏன்னு தெரியலை. உங்களைச் சுத்தி ஒரு வலை பின்னப்பட்டிருக்கு. அல்லது பின்னப்படுகிறது. யாரோ உங்களை குறி வைக்கிறார்கள்.
எனக்கு இடப்பட்ட கட்டளைப்படி விசாரிச்சு, ஒருவலையில் உங்களை உஷார் பண்ணியிருக்கேன். எஸ்! பின்னால் வரப்போகும் விசாரணை இந்த கோணத்தில்தான் இருக்கும். அதை எதிர்கொள்ள தயாராகிக் கொள்ளுங்கள் என்று சொல்லாமல் சொல்லும் முயற்சி அது. பெஸ்ட் ஆப் லக். என்னுடைய உதவி பர்சனலாக எப்போதும் உங்களுக்கு இருக்கும்”
சொல்லிவிட்டு வெளியே போனவர் திரும்பி வந்து, “அப்புறம்.. இன்னொரு விஷயம்.. இந்த மருத்துவமனை வேணாம். டிஸ்சார்ஜ் ஆகி வேறு எங்காவது போய் டிரீட்மெண்ட் எடுத்துக்குங்க!”
“எஸ் சார்.. தாங்க்ஸ் சார்!”
அவர் போன பின்பும் நீண்ட நேரம் அவர்கள் ஸ்தம்பித்து அமர்ந்திருந்தனர். இப்படியும் ஒரு போலீசா? நம்பமுடியவில்லை.
அடிப்படையில் நல்லவர்களாக இருந்தாலும் கட்டுப்பாடு, நிர்பந்தம் ஆகியவற்றால் வல்லவர்களாக செயல்பட முடியாமல் போகிறது.
அதனால் அந்த மருத்துவமனையில் இருந்து விடுபட்டு வீட்டுக்கு வந்து இங்கு ஹோம் நர்ஸ் ஏற்பாடு செய்து விட்டார்கள்.
***
ஹாலிங் பெல் ஒலிக்க, சுவீகா, “மணீஷ்.. கதவு திறந்துதான் இருக்கு, வா!” என்று கத்தினாள்.
உள்ளே வந்த மணீஷின் கையில் சிற்றுண்டி மணத்தது.
“நர்ஸ் இன்னும் வரலியா..?”
“இல்லை. நான் தான் மெதுவா வந்தாப் போதும்ன்னு சொன்னேன். நாம கொஞ்சம் தனியா பிளான் பண்ண வேண்டியிருக்கு!”
“தனியா..? என்ன சொல்லு.. சொல்லு! நான் ரெடி!” என்று சுவீகாவை மணீஷ் நெருங்க, “சீ” என்று அவனை தள்ளிவிட்டாள்.
“கம்முனுகிட!”
“உன்னை இப்படி கட் பனியனிலும், ஸ்கர்ட்டிலும் பார்க்க எனக்கு எகிறுது! என்னவோ பண்ணுது!”
“என்ன பெரிசா பண்ணிரப் போற.. பண்ணிட்டுப் போ!” என்று கைகளை கட்டிக்கொண்டு நின்றாள்.
“அதுக்கு முன்னாடி டிபனை எடுத்துவை. பசிக்கிறது!”
***
காவல் நிலையம் டீயும், வடையுமாய் சுறுசுறுப்பாகிக் கொண்டிருந்தது. கிழவி ஒருத்தி வாயும், துடைப்பமுமாய் தரையை பெருக்கிக் கொண்டிருந்தாள்.
கான்ஸ்டபிள், விநாயகருக்கு ஊதுபத்தி வைத்து, கன்னத்தில் போட்டுக் கொண்டிருந்தார்.
லாக்அப்பில் இருந்த பரட்டைஒன்று, “எதுக்கு சாமி கும்பிடறீங்க? நிறைய கேஸ் வரணும்னா...?”
“ஏய்.. உதைபடுவே நீ!”
அப்போது வாசலில் பழுப்பு புடவை தென்பட, “யாரும்மா அது..?”
“ஐயா நான்..”
“உள்ளே வா!”
உள்ளே வந்தது, டிரைவர் கோதண்டத்தின் மனைவி. அவள் முகம் இன்னும் அதிகமாய் கறுத்து, கண்களுக்கு கீழ் கன்னி போய், தூக்கமிழந்த துக்கம் தெரிந்தது.
“என்னம்மா..”
“ஐயா.. என் புருஷனை தேடி வீட்டுக்கு வந்தீங்க. என்னென்னவோ சொன்னீங்க. விரட்டுனீங்க. மிரட்டுனீங்க. அவரு வந்தா ஸ்டேஷனுக்கு வரச் சொல்லுன்னு சொன்னீங்க..”
“ஆமா. அதுக்கென்ன இப்போ” என்று அவர் தேநீரை சுவைத்து முகம் சுளித்து, “ஆறி போச்சு. ஏய் பையா வேறு வாங்கி வா! நீ சொல்லும்மா!”
“அவரை ரெண்டு நாளா காணலைங்க”
“காணலைன்னா..?”
“வீட்டுக்கு வரலீங்க. எனக்கு பயமாயிருக்கு”
“போலீசுக்கு பயந்து எங்காவது தலைமறைவா இருப்பான். பயப்பட ஏதுமில்லை. வந்திடுவான் போ”
“போனு கூட பண்ணலைங்க! அவரு செல்லு கூட எடுத்துப் போகலே. இதோ என் கைலதான் இருக்கு”
செல்போன் என்றதும் ஹெட் கான்ஸ்டபிளின் முகம் மலர்ந்தது.
“இப்படி கொடு பார்ப்போம்” என்று வாங்கி, அவசர அவசரமாய் அதை அலசி பார்க்க- அவருக்கு வெறுப்பாயிற்று.
“எங்கே? இதுல எந்த நம்பருமே காணோம்? கால் வந்தது, போனது எதுவுமே இல்லையே!”
“எதுவும் எனக்கு தெரியாதுங்கய்யா?”
“சரி, இது இங்கே இருக்கட்டும். கோதண்டம் பத்தி தகவல் கிடைச்சா சொல்லி அனுப்புறோம். நீ கிளம்பு!”
“எனக்கு பயமாயிருக்குங்க. அவருக்கு ஆபத்து எதுவும்...?”
“அதெல்லாம் எதுவுமிருக்காது. உன்னை அவர் கூப்பிட்டாலோ இல்லை அவர் எங்கே ஏதுன்னு தகவல் கிடைச்சாலோ உடனே எங்களுக்கு தெரியப்படுத்தணும்.. சரியா?”
“சரிங்க” என்று அவள் தயங்கித் தயங்கி நடக்க, “ஏய்.. பையா.. இந்தம்மாவுக்கும் ஒரு டீ கொடு!”
“வேணாங்கய்யா!”
“சும்மா குடிச்சுட்டுப் போம்மா! அரசாங்க காசுதான். எவன் எவனோ திங்கறான்.. உனக்கென்ன..!”
எந்த கவலையும் அந்த சமயத்திற்கு அழுத்தம் தரும். மன அமைதியை கெடுக்கும். நெஞ்சை பாடாய்படுத்தும். எவரிடமாவது பகிர்ந்து கொண்டாலோ அல்லது எங்காவது காற்றாட வெளியே போய் வந்தாலோ கொஞ்சம் ஆசுவாசம் கிடைக்கும்.
கோதண்டத்தின் மனைவியும் அப்போது ஆசுவாசம் பெற்று வழியில் தெரு பிள்ளையாரை தரிசித்து, சமையலுக்கு கீரை, மீன், காய்கறிகள் வாங்கிக்கொண்டு குடிசைக்குள் நுழையபோனபோது-
வேகவேகமாய் சைக்கிளில் வந்த இளைஞன் ஒருவன், “அக்காவ்..” என்று அலறினான்.
“என்னடா..?”
“உம் புருஷன்”
“எம் புருஷன்.. என்னடா சொல்லு! அவரை நீ பார்த்தியா.. எங்கே இருக்கார்?”
“ஆமாக்கா! பார்த்தேன்க்கா.. நாலுரோட்டுல- பிணமா!”
(தொடரும்)

Related Tags :
Next Story