பாடமான ஆசிரியர் தன்னம்பிக்கை பாடம் நடத்துகிறார்
ஆசிரியர்கள் நடத்தும் பாடம்தான் தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக இருக்கும். ஆசிரியர்களே தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக இருப்பது அபூர்வம்.
ஆசிரியர்கள் நடத்தும் பாடம்தான் தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக இருக்கும். ஆசிரியர்களே தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக இருப்பது அபூர்வம். அந்த அபூர்வ ஆசிரியர்களில் ஒருவர் எம். லோகநாதன். ஈரோடு காவிரி ரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கூடத்தில் அவர் பணியாற்றுகிறார்.
இவர் பள்ளிக்கூடத்திற்குள் நுழையும்போதே மாணவ- மாணவிகள் வந்து, அன்பாக சூழ்ந்துகொள்கிறார்கள். அவர் கூடுதல் சக்கரங்கள் பொருத்திய ஸ்கூட்டரில் இருந்து ஊன்றுகோல்கள் உதவியுடன் இறங்குகிறார். தனது கால்கள் இரண்டும் தரையை தொடாவிட்டாலும், ஊன்றுகோல்களை தரையில் ஊன்றி, நெஞ்சை நிமிர்த்தி நடக்கிறார். பள்ளியில் 3 மற்றும் 4-ம் வகுப்புகளுக்கு ஆங்கிலம் மற்றும் தமிழ் வழி கல்வியை கற்பிக்கிறார். ஆங்கில வார்த்தைகளை பயன் படுத்தி பேசுமாறு மாணவ- மாணவிகளை உற்சாகப்படுத்துகிறார்.
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை வடிவமைத்து உள்ள வில்லுப்பாட்டு, பொம்மலாட்டம், முகமூடி அணிந்து பாடம் கற்பித்தல் போன்ற திட்டங்களையும் செயல்படுத்துகிறார். அதனால் அவர் வகுப்பு என்றால் மாணவர்கள் உற்சாகத்தில் துள்ளுகிறார்கள். கடந்த ஆண்டு இவரது வகுப்பில்தான் விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை அதிகம் என்றும் லோகநாதன் சொல் கிறார்.
ஈரோடு கமலாநகர் பகுதியை சேர்ந்த மாணிக்கம்- சரஸ்வதி தம்பதிகளின் கடைசி மகனாக பிறந்தவர், லோகநாதன். குழந்தைப் பருவத்திலே போலியோவில் சிக்கி, கால்கள் செயலிழந்துபோக, பெற்றோருக்கு சுமையானார்.
5 வயது நிரம்பியபோது தனது வயதை ஒத்த குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்லத்தொடங்கினார்கள். ஆனால் லோகநாதனின் கல்வி கேள்விக்குறியானது. அவருக்கும் பள்ளிக்கூடம் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கியது. அந்த காலகட்டத்தில் ஈரோடு சி.எஸ்.ஐ. மாற்றுத்திறனாளிகள் இல்லத்தில் இயன்முறை சிகிச்சைக்காக லோகநாதனை பெற்றோர் அழைத்து சென்றனர். அங்கு மாற்றுத்திறனாளி மாணவர்களை அருகில் உள்ள பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிவைத்து, அந்த நிர்வாகத்தினரே விடுதியில் தங்கவைத்து கவனித்துக்கொள்வதை அறிந்த பெற்றோர் லோக நாதனையும் விடுதியில் சேர்த்து விட்டனர்.
மாணவராக இருந்தபோதே போதிப்பதில் தனக்கு இருந்த ஆர்வத்தை வெளிப்படுத்தியிருக் கிறார். 4-ம் வகுப்பு படிக்கும்போது, விடுதியில் தங்கியிருந்த 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு, தனக்கு தெரிந்த எழுத்துக்களை கற்றுக்கொடுக்கத் தொடங்கியிருக் கிறார். அப்போதே இவரது ஆசிரியர் பணி தொடங்கிவிட்டது என்று எடுத்துக்கொள்ளலாம்.
ஆசிரியர் லோகநாதன் சொல்கிறார்:
“நான் விடுதியில் தங்கியிருந்தபோது எனது பாடங்களை படித்து முடித்தவுடன், சின்ன வகுப்பு மாணவர் களுக்கு தெரியாத பாடங்களை கற்றுக்கொடுத்தேன். இது நான் 10-ம் வகுப்பு முடிக்கும்வரை தொடர்ந்தது. 10-ம் வகுப்புக்கு மேல் விடுதியில் தங்க முடியாது என்பதால் நான் வெளியே வரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போதுதான் எனக்குள் ஆசிரியராகவேண்டும் என்ற எண்ணம் உருவானது.
பிளஸ்-1 வகுப்புக்காக ஈரோடு காமராஜர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் சேர்ந்தேன். 3 சக்கர சைக்கிளை ஓட்டிக்கொண்டு பள்ளிக்கு செல்வேன். பிளஸ்-2 பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றேன். கணக்கு பதிவியல் மற்றும் தணிக்கை பாடங்களில் 200-க்கு 200 பெற்றேன். ஆசிரியர் பயிற்சி பள்ளிக்கு விண்ணப்பித்தேன். மதிப்பெண் அடிப்படையில் கும்பகோணம் மாஸ் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் இடம் கிடைத்தது.
2 ஆண்டு பயிற்சியை முடித்து எனது கனவுப்பணியான ஆசிரியராக வெளியே வந்தேன். உடனடியாக ஈரோடு செங்கோடம் பள்ளம் மாற்றுத்திறனாளிகள் பள்ளிக்கூடத்தில் பணியில் சேர்ந்தேன். அடுத்த சில மாதங்களில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடிப்படையில் அரசு பள்ளிக்கூட ஆசிரியர் பணி கிடைத்தது.
இந்த பள்ளியில் எனது வகுப்பில் உள்ள குழந்தைகளை கட்டுப்படுத்துவது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. அவர்களை கட்டுப்படுத்த அவர்கள் வழிக்கு நான் சென்றேன். அவர்களுடன் நானும் தரையில் உட்கார்ந்து கொண்டதால் அவர்களுக்கும் எனக்கும் நெருக்கம் ஏற்பட்டது. அவர்கள் மனதை புரிந்துகொண்டு அவர்களுக்கு பிடித்த ஆசிரியராக என்னை மாற்றிக்கொண்டேன். வில்லுப்பாட்டு, பொம்மலாட்டம் போன்ற கலைகள் மூலம் பாடங்களை பயிற்றுவிக்கிறேன். வகுப்பறை நிகழ்வுகளை படம்பிடித்துக்காட்டியும் மாணவர்களை உற்சாகப்படுத்துகிறேன்” என்று கூறும் ஆசிரியர் லோகநாதன், தனது முயற்சியால் மற்ற ஆசிரியர்களையும் ஒருங்கிணைத்து, பெற்றோரை இழந்த மாணவர்களுக்காக ஒரு அறக்கட்டளையை உருவாக்கியிருக் கிறார்.
அது பற்றி லோகநாதன் விளக்குகிறார்:
“இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், ‘பெற்றோர்களை இழந்த குழந்தைகளும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும்’ என்ற தலைப்பில் ஒரு ஆய்வுக்கட்டுரை தயாரித்தேன். அப்போது எங்கள் பள்ளியில் பெற்றோர்களை இழந்த நிலையில் படித்த 5 மாணவர்களை தேர்வுசெய்து அவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அறிந்தேன். மனம் கலங்கினேன். பள்ளிக்கூடத்தில் அப்போது நான் ஒட்டுமொத்தமாக கணக்கிட்டபோது பெற்றோர் இருவரும் இல்லாத குழந்தைகள், தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகள், பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள் என்ற நிலையில் 60 பேர் இருந்தனர்.
நமது ஒரு பள்ளிக்கூடத்திலேயே இத்தனைபேர் இருந்தால், தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் இப்படிப்பட்ட குழந்தைகள் எவ்வளவுபேர் இருப்பார்கள் என்று நினைத்து வேதனைப்பட்டேன். அதை தொடர்ந்து ஆசிரியர்களிடமும், பெற்றோர்களிடமும் பேசி ‘பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வழிகாட்டும் அறக்கட்டளை’யை தொடங்கினோம். அதில் நான் ஆலோசகராக இருக்கிறேன். பெற்றோரே அதை நிர்வகிக்கிறார்கள்.
இத்தகைய மாணவர்களை பற்றி நான் ஆய்வு செய்தபோது எடுத்த படங்களை ‘யூடியூப்’ இணையத்தில் வெளியிட்டேன். அதைப்பார்த்த சென்னிமலையை சேர்ந்த ஒருவர் ரூ.3½ லட்சம் மதிப்புள்ள நிலத்தை வழங்கினார்.
பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு மற்ற குழந்தைகளின் பெற்றோர் உதவுகிறார்கள். இதுபோல் குழந்தைகளின் மனதில் சேவை மனப்பான்மையை விதைக்கும் வகையில் எனது வகுப்பில் சேவை உண்டியல் வைத்து இருக்கிறேன். குழந்தைகள் தங்கள் செலவுக்காக பெற்றோர் கொடுக்கும் ஒரு ரூபாய், 2 ரூபாயில் கூட மிச்சம் பிடித்து உண்டியலில் போடுகிறார்கள். அதை முதியோர் அமைப்புகளுக்கு கொடுத்து உதவுகிறோம்.
நான் பள்ளி விடுமுறையின்போது, அரசு பள்ளி ஆசிரியர்களின் கல்வியாளர் சங்கத்தின் மூலம் நடத்தப்படும் மாநாடுகளுக்கு செல்வேன். அங்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள முடிகிறது. எனது பணியை அகரம் பவுண்டேசன் அமைப்பு பாராட்டி உள்ளது. எனது பணிக்காக எனது தாயார் சரஸ்வதிக்கு தனியார் தொலைக்காட்சி சிறந்த அன்னை என்கிற விருதினை வழங்கி கவுரவித்து உள்ளது. எனது பணிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியை எஸ்.சாந்தாமணியும், இதர ஆசிரியர்களும் ஊக்கம் தருகிறார்கள்” என்று கூறும் ஆசிரியர் லோகநாதன், மாணவ- மாணவிகளுக்கு தன்னம்பிக்கை பற்றியும் பாடம் நடத்துகிறார். அதற்கு தானே எடுத்துக்காட்டாகவும் இருக்கிறார். பாடமான ஆசிரியர் தன்னம்பிக்கை பாடம் நடத்துகிறார்
வில்லுப்பாட்டில் பாடம் சொல்லிக் கொடுக்கிறார்.
ஆசிரியர் லோகநாதன்
தலைமை ஆசிரியையுடன்

நான் பள்ளி விடுமுறையின்போது, அரசு பள்ளி ஆசிரியர்களின் கல்வியாளர் சங்கத்தின் மூலம் நடத்தப்படும் மாநாடுகளுக்கு செல்வேன். அங்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள முடிகிறது. எனது பணியை அகரம் பவுண்டேசன் அமைப்பு பாராட்டி உள்ளது. எனது பணிக்காக எனது தாயார் சரஸ்வதிக்கு தனியார் தொலைக்காட்சி சிறந்த அன்னை என்கிற விருதினை வழங்கி கவுரவித்து உள்ளது. எனது பணிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியை எஸ்.சாந்தாமணியும், இதர ஆசிரியர்களும் ஊக்கம் தருகிறார்கள்” என்று கூறும் ஆசிரியர் லோகநாதன், மாணவ- மாணவிகளுக்கு தன்னம்பிக்கை பற்றியும் பாடம் நடத்துகிறார். அதற்கு தானே எடுத்துக்காட்டாகவும் இருக்கிறார்.

Related Tags :
Next Story