ஆறுமுகநேரியில் புனித அன்னம்மாள் ஆலய திருவிழா திரளான மக்கள் பங்கேற்பு


ஆறுமுகநேரியில் புனித அன்னம்மாள் ஆலய திருவிழா திரளான மக்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 14 Aug 2017 4:15 AM IST (Updated: 14 Aug 2017 12:12 AM IST)
t-max-icont-min-icon

ஆறுமுகநேரியில் நடந்த புனித அன்னம்மாள் ஆலய திருவிழாவில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

ஆறுமுகநேரி,

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் உள்ள புனித அன்னம்மாள் ஆலய திருவிழா கடந்த 4–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நவநாள் ஜெபம் மற்றும் மாலை ஆராதனைகள் நடந்தன. 9–ம் திருநாளான நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு ஆறுமுகநேரி மடத்துவிளையில் உள்ள புனித சவேரியர் ஆலயத்தில் இருந்து புனித அன்னம்மாள் திருவுருவ சப்பர பவனி தொடங்கியது.

நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து, ஆறுமுகநேரி ரெயில்நிலையம் அருகே உள்ள புனித அன்னம்மாள் ஆலயத்திற்கு சப்பரம் வந்தடைந்தது. அதனை தொடர்ந்து திருவிழா மாலை ஆராதனை நடந்தது. பின்னர் மீண்டும் சப்பர பவனி ஆலயத்தில் இருந்து புறப்பட்டு, மடத்துவிளையில் உள்ள புனித சவேரியர் ஆலயத்திற்கு சென்றடைந்தது.

கூட்டு திருப்பலி

10–ம் திருநாளான நேற்று காலை 7.30 மணிக்கு ஆலயத்தில் திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். திருப்பலியினை ஆறுமுகநேரி பங்கு தந்தை ஸ்டார்வின் அடிகளார், சென்னை மறைமாவட்ட குருமட அதிபர் ஜான்துரை, திருச்செந்தூர் ஜீவாநகர் பங்கு தந்தை சபேஸ் அடிகளார் ஆகியோர் நிறைவேற்றினார்கள். திருவிழா ஏற்பாடுகளை பரதர் நல கமிட்டி தலைவர் அமிர்தம் பர்னாந்து மற்றும் கமிட்டியினர் செய்து இருந்தனர்.


Related Tags :
Next Story