தூத்துக்குடியில் சுதந்திர தினவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

தூத்துக்குடி,
இந்திய சுதந்திரதினம் நாளை(செவ்வாய்க்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட விளையாட்டு அரங்கில் சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி போலீசாரின் அணிவகுப்பு நடத்தப்படும். இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி நேற்று காலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்தது. இந்த ஒத்திகையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் சுதந்திரதினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. மக்கள் கூடும் இடங்களான பஸ் நிலையம், ரெயில் நிலையம் மற்றும் விமான நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கிய இடங்களில் போலீஸ் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Tags :
Next Story