பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் கலெக்டரிடம், எம்.எல்.ஏ. மனு


பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் கலெக்டரிடம், எம்.எல்.ஏ. மனு
x
தினத்தந்தி 14 Aug 2017 4:15 AM IST (Updated: 14 Aug 2017 12:12 AM IST)
t-max-icont-min-icon

பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் கலெக்டரிடம், முருகையா பாண்டியன் எம்.எல்.ஏ. மனு

நெல்லை,

அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ. முருகையா பாண்டியன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டர் சந்தீப் நந்தூரியை சந்தித்து மனு கொடுத்தார்.

அந்த மனுவில், அம்பாசமுத்திரம் தொகுதி மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்கவும், நிலத்தடி நீர் உயரவும், ஆடு, மாடுகள் குடிக்கவும் பாபநாசம் அணையில் இருந்து கன்னடியன் கால்வாய், வடக்கு கோடை மேல்அழகியான், தெற்கு கோடை மேல்அழகியான், நதியுண்ணி ஆகிய கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடவேண்டும். இதனால் பொதுமக்கள் பயன் அடைவார்கள். இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, உடனே கால்வாய்களில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.


Related Tags :
Next Story