மாமல்லபுரம் விடுதிகளில் தங்கும் வெளிநாட்டினர் குறித்த விவரங்களை போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும்


மாமல்லபுரம் விடுதிகளில் தங்கும் வெளிநாட்டினர் குறித்த விவரங்களை போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும்
x
தினத்தந்தி 14 Aug 2017 4:00 AM IST (Updated: 14 Aug 2017 1:55 AM IST)
t-max-icont-min-icon

குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் மாமல்லபுரம் விடுதிகளில் தங்கும் வெளிநாட்டினர் குறித்த விவரங்களை போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும் துணை போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு.

மாமல்லபுரம்,

குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் மாமல்லபுரம் தனியார் விடுதிகள், கடற்கரை பண்ணை வீடுகள், கடற்கரை சொகுசு விடுதி உரிமையாளர்கள், நிர்வாக இயக்குனர்களை அழைத்து பல்வேறு விதிமுறைகளை கடைபிடிப்பது குறித்து மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு எட்வர்ட் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

அப்போது அவர் கூறியதாவது:–

மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதிகள், கடற்கரை சொகுசு விடுதிகளில் தங்கும் வெளிநாட்டு பயணிகள் குறித்த முழு விவரங்களை சி படிவத்தில் பூர்த்தி செய்து மாமல்லபுரம் போலீஸ்நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். 18 வயதிற்கு குறைவான பெண்களை விடுதியில் தங்க அனுமதிக்க கூடாது. விடுதியில் தங்குபவர்களிடம் கண்டிப்பாக ஆதார் அட்டை நகல் வாங்க வேண்டும்.

அனைத்து விடுதிகளிலும் கண்டிப்பாக கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். குடிபோதையில் உள்ள நபர்களை விடுதி நீச்சல் குளத்தில் குளிக்க அனுமதிக்க கூடாது. இந்த விதிமுறைகளை பின்பற்றாத விடுதிகளின் உரிமம் ரத்து செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story