அர்ச்சனாபுரத்தில் ஜல்லிக்கட்டு காளைகள் முட்டியதில் 107 பேர் காயம்
அர்ச்சனாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 107 பேர் காயம் அடைந்தனர்.
திருமானூர்,
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள அர்ச்சனாபுரம் கிராமத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதையொட்டி நடுத்தெருவில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. முதலில் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.
இதில் 400-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. இதில் சேலம், தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த 160-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
107 பேர் காயம்
காளைகள் முட்டியதில் லால்குடியை சேர்ந்த சுந்தர் (வயது 27), சமயபுரத்தை சேர்ந்த சுபாஷ் (25), திருமானூரை சேர்ந்த சிவக்குமார் (35), கல்லக்குடியை சேர்ந்த சுந்தர்ராஜ் (33), நடராஜன் (40) உள்பட 107 பேர் காயம் அடைந்தனர். பின்னர் காயமடைந்தவர்களுக்கு பொய்யூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டன.
பரிசு பொருட்கள்
ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால் வெள்ளி நாணயங்கள், சில்வர் பாத்திரங்கள், நாற்காலிகள், கட்டில், வேட்டி, சேலை போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
ஜல்லிக்கட்டு போட்டியை காண பெரம்பலூர், அரியலூர், ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை, தஞ்சை, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு போட்டியை கண்டு களித்தனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் அர்ச்சனாபுரம் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Related Tags :
Next Story