திருவாரூரில் மாநில அளவிலான கேரம் விளையாட்டு போட்டி கலெக்டர் தொடங்கி வைத்தார்
திருவாரூரில் மாநில அளவிலான கேரம் விளையாட்டு போட்டியை கலெக்டர் நிர்மல்ராஜ் தொடங்கி வைத்தார்.
திருவாரூர்,
திருவாரூரில் மாநில அளவிலான கேரம் விளையாட்டு போட்டிகள் நேற்று தொடங்கியது. மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் போட்டியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கேரம் விளையாட்டு சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் விஜயராஜ், மாவட்ட செயலாளர் மாரியப்பன், துணை செயலாளர் வெங்கடேஷ், பொருளாளர் கே.மகேஷ், இணை செயலாளர்கள் மகேஷ், சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் சென்னை, திருச்சி, சேலம், கோவை, மதுரை உள்பட 21 மாவட்டங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் 12 வயதுக்குட்பட்ட பிரிவில் 108 மாணவர்களும், 58 மாணவிகளும், 14 வயதுக்குட்பட்ட பிரிவில் 104 மாணவர்களும், 96 மாணவிகளும் என மொத்தம் 366 பேர் கலந்து கொண்டனர். போட்டியில் ஒவ்வொரு மேஜைக்கு தனித்தனியே கேமரா பொருத்தப்பட்டு பதிவு செய்யப்படுகிறது. இந்த போட்டிகளில் வெற்றி பெறும் 18 பேர் தேசிய போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த போட்டிகள் 3 நாட்கள் நடைபெறுகிறது.

Related Tags :
Next Story