கல்லூரி மாணவியின் ஆபாச படத்தை ‘வாட்ஸ்-அப்’பில் வெளியிட்ட போலீஸ்காரர் கைது
திருமணமானதை மறைத்து கல்லூரி மாணவியுடன் உல்லாசம் அனுபவித்துவிட்டு, அவருடன் நெருக்கமாக இருந்த ஆபாச படத்தை ‘வாட்ஸ்-அப்’பில் வெளியிட்ட போலீஸ்காரர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோட்டக்குப்பம்,
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள வேம்பூரை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 30). இவர், கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இதன்பின் ஆரோவில் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டார். அங்குள்ள ஒரு அம்மன் கோவில் பாதுகாப்பு பணிக்காக மணிகண்டன் அடிக்கடி சென்று வந்தார்.
அப்போது அங்கு கடை நடத்தி வந்த புதுவையை சேர்ந்த பெண்ணுடன் மணிகண்டனுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு பணிக்கு வரும்போது அவர் கடைக்கு செல்வது வழக்கம். கடை நடத்தி வந்த பெண்ணின் மகள் புதுவையில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறாள். விடுமுறை நாட்களின் போது வியாபாரத்தை கவனிப்பதற்காக தாய்க்கு உதவியாக மாணவி கடைக்கு வந்து சென்றார். அப்போது அந்த மாணவிக்கும், மணிகண்டனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது.
இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதற்கிடையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மணிகண்டன் கிளியனூர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டார். ஆனால் பணிக்குச் செல்லாமல் விடுமுறை எடுத்துக் கொண்டு அந்த மாணவியை வெளியூர்களுக்கு அழைத்துச் சென்று மணிகண்டன் உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது அவர்கள் நெருக்கமாக இருந்ததை அந்த மாணவிக்கு தெரியாமல் செல்போனில் மணிகண்டன் படம் பிடித்து வைத்து இருந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் கையில் இருந்த பணம் செலவானதும் அவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
அப்போது மணிகண்டனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, குழந்தைகள் இருப்பது மாணவிக்கு தெரியவந்தது. இதனால் மோசம்போனதை அறிந்த அந்த மாணவி இதுபற்றி தனது பெற்றோருக்கு தெரிவித்தார். அவர்கள் மாணவியை அழைத்துச் சென்று உள்ளனர். இதன்பின் மணிகண்டனுடன் பழகுவதை மாணவி நிறுத்திக் கொண்டார். இந்தநிலையில் அவரை மணிகண்டன் செல்போனில் தொடர்பு கொண்டு தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். ஆனால் இதற்கு அந்த மாணவி மறுத்து விட்டதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் நாம் இருவரும் நெருக்கமாக இருக்கும் ஆபாச படத்தை உனது தந்தைக்கும், அண்ணனுக்கும் அனுப்பி விடுவேன் என மிரட்டியதாக தெரிகிறது. ஆனால் அவரது மிரட்டலுக்கு மாணவி பணியவில்லை. இதைத்தொடர்ந்து அவரது தந்தைக்கும், அண்ணனுக்கும் ‘வாட்ஸ்-அப்’பில் ஆபாச படங்களை மணிகண்டன் அனுப்பினார்.
இதனால் மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீசில் அவர்கள் புகார் செய்தனர். இதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாள் விசாரணை நடத்தி போலீஸ்காரர் மணிகண்டனை கைது செய்தார். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் போலீசார் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story