ஈரோட்டில் ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்
திட்டக்குடியில் சிவக்குமார் என்பவர் படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், கொலை செயலில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரியும் ஆதித்தமிழர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.
ஈரோடு,
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் சிவக்குமார் என்பவர் படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், கொலை செயலில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரியும் ஆதித்தமிழர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில நிதி செயலாளர் பெருமாவளவன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் அருந்ததியர் இளைஞர் பேரவை மாநில அமைப்பாளர் வடிவேல், தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சிந்தனை செல்வன், கொள்கை பரப்பு செயலாளர் விஸ்வநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story