டாக்டர்கள் இல்லாததால் 2 பேர் உயிரிழப்பு: ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ அலுவலர் பொறுப்பேற்பு
ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் இல்லாததால் 2 பேர் உயிரிழந்தனர். அதைத்தொடர்ந்து மருத்துவ அலுவலர் உடனடியாக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அத்துடன் கூடுதலாக ஒரு டாக்டரும் நியமனம் செய்யப்பட்டார்.
ஆம்பூர்,
ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரி தாலுகா அந்தஸ்து பெற்ற ஆஸ்பத்திரி ஆகும். 18 டாக்டர்கள் இருக்க வேண்டிய பணியிடத்தில் வெறும் 4 டாக்டர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால், ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆம்பூர் அருகே நடந்த விபத்தில் காயம் அடைந்த சென்னையைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 65), சந்தானம் (73) ஆகிய 2 பேரும், இருதய பாதிப்பால் ராள்ளகொத்தூரை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவி வைஷ்ணவி (13) ஆகிய 3 பேரும் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
ஆனால், பணி நேரத்தில் சுமார் 2½ மணி நேரமாக எந்த டாக்டரும் இல்லாததால் ராஜ்குமார், வைஷ்ணவி ஆகிய 2 பேருக்கும் சரியான சிகிச்சை கிடைக்காததால் அவர்கள் பரிதாபமாக செத்தனர். இதனால், ஆவேசமடைந்த பொதுமக்கள் ஆஸ்பத்திரி நுழைவு வாயில் கேட்டை பூட்டி போராட்டம் நடத்தினர். அதைத்தொடர்ந்து மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் சாந்தி உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
பொறுப்பேற்றார்
அதைத்தொடர்ந்து ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கூடுதலாக ஒரு டாக்டர் நியமிக்கப்பட்டார். மேலும் மருத்துவ அலுவலர் (பொறுப்பு) ஷர்மிளா மீது வந்த புகாரை தொடர்ந்து அவர் மீது துறை ரீதியான விசாரணை நடைபெறும் என கூறப்படுகிறது. இதற்கிடையே, ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரி மருத்துவ அலுவலராக இருந்த டாக்டர் கென்னடி சென்னையில் தரமதிப்பீட்டு பணியில் வேலை பார்த்து வந்தார். இதனால் தான் பொறுப்பு மருத்துவ அலுவலராக ஷர்மிளா அதனை கவனித்து வந்தார். தற்போது எழுந்த பிரச்சினையின் காரணமாக டாக்டர் கென்னடி உடனடியாக ஆம்பூர் வரவழைக்கப்பட்டார். அவர் நேற்று மருத்துவ அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
மேலும் மருத்துவ அலுவலர் பொறுப்பில் இருந்த ஷர்மிளா, அதிகாரிகளின் விசாரணைக்கு பயந்து மருத்துவ விடுப்பு கேட்டதாகவும், அவருக்கு விடுப்பு வழங்க மருத்துவ அலுவலர் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தால் ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் நேற்றும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story