சென்னை ஆடிட்டரிடம் ரூ.26 லட்சம் மோசடி வழக்கில் ஒருவர் கைது


சென்னை ஆடிட்டரிடம் ரூ.26 லட்சம் மோசடி வழக்கில் ஒருவர் கைது
x
தினத்தந்தி 15 Aug 2017 3:45 AM IST (Updated: 15 Aug 2017 2:35 AM IST)
t-max-icont-min-icon

சென்னை ஆடிட்டரிடம் ரூ.26 லட்சம் மோசடி வழக்கில் ஒருவர் கைது மேலும் 8 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

பனப்பாக்கம்,

சென்னை ஆழ்வார்திருநகரில் உள்ள இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 33). ஆடிட்டர். திருநெல்வேலி மாவட்டம் தென்காசி தாலுகா இடைத்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (36). இவர்கள் இருவருக்கும் ரியல் எஸ்டேட் தொழில் தொடர்பாக பழக்கம் ஏற்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிகண்டனிடம், ரஞ்சித்குமார் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் பண நெருக்கடி உள்ளது என்று கூறி உள்ளார். அதற்கு மணிகண்டன் எனக்கு தெரிந்த நபர்களிடம் கோடிக்கணக்கில் 100 ரூபாய் நோட்டுகள் உள்ளது. அதனை 2 ஆயிரம் ரூபாய் நோட்டாக மாற்றி கொடுத்தால் கமிஷன் கிடைக்கும். அதன் மூலம் நிறைய சம்பாதிக்கலாம் என்று மணிகண்டன் கூறினார். அதை நம்பிய ரஞ்சித்குமார், அவர் தம்பி பாலரோசய்யாவும் ரூ.26 லட்சத்திற்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை சேகரித்து அந்த தொகையை மணிகண்டன் கூறிய கும்பலிடம் கொடுத்த போது ரூ.26 லட்சத்தை பெற்றுக் கொண்ட அந்த கும்பல் நூதன முறையில் ஏமாற்றிவிட்டு பணத்தை எடுத்து சென்று விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து ரஞ்சித்குமார் காவேரிப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 8 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். 

Related Tags :
Next Story