மேட்டூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை? போலீசார் விசாரணை

மேட்டூர்,
மேட்டூர் ராமன் நகரை சேர்ந்தவர் கண்ணன். தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சுரேஷ் அமெரிக்காவில் வேலை செய்து வருகிறார். இளைய மகனும் அங்கேயே படித்து வருகிறார். கண்ணனும், அவருடைய மனைவியும் மட்டும் இங்கு இருந்தனர். இவர்களும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு மகன்களை பார்க்க அமெரிக்காவுக்கு சென்று விட்டனர்.
இந்த நிலையில் இவர்களுடைய வீட்டின் பூட்டு நேற்று காலை உடைக்கப்பட்டு கிடந்தது. பூட்டை உடைத்த மர்ம ஆசாமிகள் வீட்டுக்குள் புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அக்கம், பக்கத்தினர் கருமலைக்கூடல் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். வீட்டின் உரிமையாளர் வந்தால்தான் நகை, பணம் கொள்ளை போனதா? அவ்வாறு கொள்ளை போயிருந்தால் எவ்வளவு நகை, பணம் கொள்ளை போனது? என்பது தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Tags :
Next Story