ஜோலார்பேட்டையில் சாலையில் நாற்று நடும் போராட்டம்


ஜோலார்பேட்டையில் சாலையில் நாற்று நடும் போராட்டம்
x
தினத்தந்தி 15 Aug 2017 4:15 AM IST (Updated: 15 Aug 2017 2:36 AM IST)
t-max-icont-min-icon

ஜோலார்பேட்டையில் சாலையில் நாற்று நடும் போராட்டம்

ஜோலார்பேட்டை,

ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகில் உள்ள பஸ் நிறுத்தம் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக சாலைகள் குண்டு குழியுமாக உள்ளன. சாலையை சீர்செய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அதிகாரிகள் யாரும் அதனை கண்டு கொள்ளவில்லை.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஜோலார்பேட்டை பகுதியில் மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியது. நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக ரெயில் நிலையம் அருகில் உள்ள பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள சாலையில் மழைநீர் தேங்கியது. இதனால், கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர். அதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் சாலையில் தண்ணீர் தேங்கிய பகுதியில் நாற்றுகளை நட்டு போராட்டம் நடத்தினர்.


Related Tags :
Next Story