தொடர் விடுமுறையால் ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறை காரணமாக நேற்று ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.
பென்னாகரம்,
தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான ஒகேனக்கல்லில் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிப்பது வழக்கம். இந்த நிலையில் தொடர் விடுமுறை காரணமாக ஒகேனக்கல்லில் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். இதனால் எண்ணெய் மசாஜ் செய்யும் இடங்களில் கூட்டம் அலைமோதியது. எண்ணெய் மசாஜ் செய்து கொண்டவர்கள் மெயின் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
தீவிர ரோந்துப்பணி
சுற்றுலா பயணிகளில் ஏராளமானோர் பரிசல்களில் சென்று ஒகேனக்கல்லின் இயற்கை எழிலை கண்டு களிப்பதில் ஆர்வம் காட்டினார்கள். இதனால் பரிசல்துறைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பரிசல் சவாரி விறுவிறுப்பாக நடந்தது. ஒகேனக்கல்லில் உள்ள அருங்காட்சியகம், முதலைப்பண்ணை, மீன்பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட இடங்களையும் ஏராளமானோர் கண்டு களித்தனர். மேலும் நேற்று மீன் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.
6,700 கனஅடி நீர்வரத்து
ஒகேனக்கல்லில் நேற்று மாலை வினாடிக்கு 6,700 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
இதனால் ஆற்றங்கரையோர பகுதிகள் மற்றும் அருவிகள் அமைந்துள்ள இடங்களில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story