எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் இணைந்து இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டும்
எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் இணைந்து இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டும் என்று புதிய நீதிக்கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்தார்.
ஆரணி,
நாடு முழுவதும் நாளை (அதாவது இன்று) சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. பொதுமக்களுக்கு புதிய நீதிக்கட்சியின் சார்பில் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். முன்னாள் முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா, நீதிக்கட்சியின் நூற்றாண்டு விழா, புதிய நீதிக்கட்சியின் சார்பில் அடுத்த மாதம் 25-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.
தமிழகத்தில் உள்ள ஆற்றுப்பகுதிகளில் 5 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்ட புதிய நீதிக்கட்சி கேட்டுக் கொள்கிறது. அதற்காக தமிழக அரசு நீர்வள வாரியம் அமைத்து தனியாக அமைச்சரை நியமிக்க வேண்டும்.
தமிழக முதல் -அமைச்சரை பற்றி டி.டி.வி.தினகரன் தவறான முறையில் விமர்சித்து இருக்கக் கூடாது. விமர்சித்து விட்டார் அது தவறு தான். இன்னும் 3½ ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சி உள்ளது. எந்த எம்.எல்.ஏ.வுக்கும் ஆட்சியை கவிழ்க்க மனமில்லை. எதிர்க்கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தாலும் கண்டிப்பாக ஆட்சி கவிழாது.
எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் இணைந்து செயல்பட்டு இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டும். ஏனென்றால் நான் இதே சின்னத்தில் எம்.எல்.ஏ.வாகவும், எம்.பி.ஆகவும் வெற்றி பெற்றவன். எனவே அந்த சின்னத்திற்கு தனி மரியாதை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது ஏ.சி.எஸ். கல்விக்குழும செயலாளர்கள் ஏ.சி.ரவி, ஏ.சி.பாபு, புதிய நீதிக்கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.ஜெயக்குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் எம்.ஆர்.தினேஷ்பாபு, நகர செயலாளர் ஜி.ஏ.கணேசன் உள்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
முன்னதாக ஆரணி-இரும்பேடு ஏ.சி.எஸ். நகரில் உள்ள புதிய நீதிக்கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகத்தின் தந்தை சொக்கலிங்கம் முதலியார் நினைவு மண்டபத்தில், அவரின் நினைவாக ஏழை மக்களுக்கு இலவச, வேட்டி சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இலவச வேட்டி-சேலைகளை ஏ.சி.சண்முகம் வழங்கினார்.

Related Tags :
Next Story