விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டும் அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்


விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டும் அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 15 Aug 2017 4:00 AM IST (Updated: 15 Aug 2017 2:37 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ள விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டும் என்று அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கரூர்,

இயற்கை நீர் வள பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் கரூரில் நாளை (புதன்கிழமை) தாசில்தார் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பங்கேற்பது தொடர்பாக அனைத்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கரூர் கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

கதிராமங்கலம், நெடுவாசல் பகுதிகளில் இயற்கை எரிவாயு எடுக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும். கரூரில் நாளை நடைபெற உள்ள விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்பது. கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் கொள்முதல் விலை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் ராமர் எம்.எல்.ஏ., காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் சின்னச்சாமி மற்றும் திராவிடர் கழகம், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கழகம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், விவசாய சங்கத்தினர் உள்பட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர். 

Next Story