டெங்கு காய்ச்சலுக்கு அரசு பள்ளி மாணவி பலி


டெங்கு காய்ச்சலுக்கு அரசு பள்ளி மாணவி பலி
x
தினத்தந்தி 15 Aug 2017 4:15 AM IST (Updated: 15 Aug 2017 2:37 AM IST)
t-max-icont-min-icon

மணமேல்குடி அருகே டெங்கு காய்ச்சலுக்கு அரசு பள்ளி மாணவி ஒருவர் பலியானார்.

மணமேல்குடி,

மணமேல்குடி அருகே உள்ள மேலஸ்தானம் கிராமத்தை சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மனைவி பாதம்பிரியாள். இவர்களது மகள் சிவரஞ்சனி (வயது 13). இவர் மேலஸ்தானம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் சிவரஞ்சனிக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன் லேசான காய்ச்சல் ஏற்பட்டது.

இதையடுத்து அவரது பெற்றோர் மணமேல்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து காய்ச்சல் இருந்ததால் அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அதில் டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

பரிதாபசாவு

இதையடுத்து சிவரஞ்சனி மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மேல்சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் டெங்குகாய்ச்சல் அதிகமாகி சிகிச்சை பலனின்றி சிவரஞ்சனி நேற்று பரிதாபமாக இறந்தார். பின்னர் சிவரஞ்சனியின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இதனால் அந்த கிராமம் சோகத்தில் மூழ்கியது.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

இது குறித்து மேலஸ்தானம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், எங்கள் கிராமப்பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. மேலும் கழிவுநீர் அனைத்தும் ஊருக்குள் வருகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பரவி வரும் டெங்கு காய்ச்சலை தடுத்து நிறுத்த மருந்துவ முகாம் மற்றும் துப்புரவு பணியினை நடத்தி டெங்கு காய்ச்சலால் மரணம் ஏற்படுவதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும், என்றனர். 

Related Tags :
Next Story