தமிழக விவசாயிகளின் கடன் முழுவதையும் மத்திய, மாநில அரசுகள் தள்ளுபடி செய்யவேண்டும்
கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக விவசாயிகளின் கடன் முழுவதையும் மத்திய, மாநில அரசுகள் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மறைந்த தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் சிவசாமியின் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர்கள் வெங்கடேசன், கண்ணன் மற்றும் கோணப்பன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவு அஞ்சலி நிகழ்ச்சியின்போது டாக்டர் சிவசாமியின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.
இதைத் தொடர்ந்து மாநில துணைத் தலைவர் கோணப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடன் தள்ளுபடி
தமிழகத்தில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக விவசாயிகள் பெற்ற கடனை முழுமையாக தள்ளுபடி செய்து, புதிய கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரை தூர்வாரப்பட்ட ஏரிகளுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் விளைநிலங்களுக்கு புகுந்து பயிர்களை நாசம் செய்துவரும் யானை மற்றும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை தளர்த்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகிகள் வெங்கடேசப்பா, மூர்த்தி, முனி ரெட்டி, கிருஷ்ணப்பா, ராமமூர்த்தி, அப்பைய்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story