வீட்டு முன் மணல் கொட்டியதில் ஏற்பட்ட தகராறில் இரும்பு கம்பியால் அடித்து முதியவர் கொலை
தொட்டியம் அருகே வீட்டு முன் மணல் கொட்டியதில் ஏற்பட்ட தகராறில் முதியவர் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மினி பஸ் கண்டக்டர் கைது செய்யப்பட்டார்.
தொட்டியம்,
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள கொளக்குடி மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் பாக்கியம்(வயது 70). கூலி தொழிலாளி. இவர் வீடு மராமத்து பணிக்காக தனது வீட்டின் முன்பு மணல் கொட்டியிருந்தார்.
நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு கட்டில்போட்டு பாக்கியம் அமர்ந்து இருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த அதே தெருவை சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் பவுல்ராஜ் என்ற பாலாஜி(29) ‘தெருவில் மணலை எப்படி கொட்டலாம்‘ என கேட்டு பாக்கியத்திடம் தகராறு செய்தார். இதில் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
அப்போது ஆத்திரமடைந்த பவுல்ராஜ், அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து பாக்கியத்தின் தலையில் அடித்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவலறிந்த தொட்டியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பாக்கியத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை நடந்த இடத்தை திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கல்யாண், முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு பாலமுருகன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இந்த கொலை தொடர்பாக தொட்டியம் போலீசார் வழக்கு பதிவு செய்து பவுல்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட பவுல்ராஜ் மினிபஸ்சில் கண்டக்டராக வேலைபார்த்து வருகிறார்.

Related Tags :
Next Story