பாளையங்கோட்டையில் சுதந்திர தினத்தையொட்டி போக்குவரத்து மாற்றம்
சுதந்திர தினத்தையொட்டி பாளையங்கோட்டையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
நெல்லை,
சுதந்திர தினவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் சுதந்திர தின விழா நடக்கிறது.
கலெக்டர் சந்தீப் நந்தூரி தேசிய கொடியேற்றி போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். இதையொட்டி பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் 500 போலீசார் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதோடு, விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது.
எனவே பொதுமக்கள் எந்தவித அச்சமின்றி வ.உ.சி. மைதானத்தில் நடைபெறும் சுதந்திரதின விழாவை கண்டுகளிக்கலாம்.
இந்த சுதந்திரதின விழாவை காண வரும் பள்ளி குழந்தைகளின் வாகனங்களை பாளையங்கோட்டை ராமர் கோவில் மைதானத்திலும், பொதுமக்கள் தங்களது வாகனங்களை நேருஜி கலையரங்கம், ஜோதிபுரம் திடல், எல்.ஐ.சி. கோட்ட அலுவலகம் முதல் ரோஸ்மேரி பள்ளி வரையிலான சாலைகளிலும் நிறுத்த வேண்டும்.
மேலும் பாளையங்கோட்டையில் காலை 7 மணி முதல் 11 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. நெல்லை சந்திப்பில் இருந்து பாளையங்கோட்டை பஸ்நிலையத்திற்கு வரும் பஸ்கள், வாகனங்கள் பாளையங்கோட்டை மார்க்கெட், சமாதானபுரம், மரியா கேன்டீன் வழியாக வரவேண்டும். இதேபோல் பாளையங்கோட்டை பஸ்நிலையத்தில் இருந்து சந்திப்பு பஸ்நிலையத்திற்கு செல்லும் பஸ்கள், வாகனங்கள் பாளையங்கோட்டை மரியா கேன்டீன், சமாதானபுரம், மனகாவலன்பிள்ளை ஆஸ்பத்திரி ரோடு, லங்காகானா ரோடு, நூற்றாண்டு மண்டபம், முருகன்குறிச்சி வழியாக செல்ல வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
சுதந்திர தினவிழாவையொட்டி பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் சுதந்திர தின விழா ஒத்திகை மற்றும் போலீஸ் அணிவகுப்பு நடந்தது. நெல்லை வ.உ.சி. மைதானம் உள்பட மாநகர பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகளிடம் போலீசார் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்த பிறகே அனுமதித்தனர்.

Related Tags :
Next Story