தமிழகத்திற்கு ‘நீட்’ தேர்வுக்கு நிரந்தரமாக விலக்கு அளிக்க வாய்ப்பு இல்லை தமிழிசை சவுந்திரராஜன் பேட்டி


தமிழகத்திற்கு ‘நீட்’ தேர்வுக்கு நிரந்தரமாக விலக்கு அளிக்க வாய்ப்பு இல்லை தமிழிசை சவுந்திரராஜன் பேட்டி
x
தினத்தந்தி 15 Aug 2017 5:00 AM IST (Updated: 15 Aug 2017 4:27 AM IST)
t-max-icont-min-icon

கோவை விமான நிலையத்தில் தமிழிசை சவுந்திரராஜன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

கோவை,

கோவை விமான நிலையத்தில் தமிழிசை சவுந்திரராஜன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– தமிழக அரசு கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று சொன்னதால் மட்டுமே ‘நீட்’ தேர்வில் இருந்து ஓராண்டு விலக்கு அளிக்க மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது. ஆனால் தமிழகத்திற்கு ‘நீட்’ தேர்வில் இருந்து நிரந்தரமாக விலக்கு அளிக்க வாய்ப்பு இல்லை.

உத்தரபிரதேச முதல்–மந்திரி பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ப.சிதம்பரம் கூறியுள்ளார். ப.சிதம்பரம் போன்றவர்கள் அரசியலை விட்டே வெளியேற வேண்டும். பெப்சி தொழிலாளர்கள் போராடும் போது நடிகர் கமல்ஹாசன் ஏன் பேசவில்லை. சமூக வலைத்தளங்களில் மட்டும் நடிகர் கமல்ஹாசன் கருத்து சொல்வது சரியல்ல, அரசியலுக்கு வந்து பேச வேண்டும். ‘நீட்’ தேர்வை பொறுத்தவரை குதிரை பேரம் எங்கும் நடக்கவில்லை. குதிரை பேரம் என்று சொல்லி ‘நீட்’ தேர்வை நடிகர் கமல்ஹாசன் கொச்சைப்படுத்துகிறார். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story