‘வந்தே மாதரம் பாடலை கட்டாயமாக்க வேண்டும்’ உத்தவ்தாக்கரே பேச்சு


‘வந்தே மாதரம் பாடலை கட்டாயமாக்க வேண்டும்’ உத்தவ்தாக்கரே பேச்சு
x
தினத்தந்தி 15 Aug 2017 5:06 AM IST (Updated: 15 Aug 2017 5:06 AM IST)
t-max-icont-min-icon

‘வந்தே மாதரம் பாடலை கட்டாயமாக்க வேண்டும்’ என மும்பையில் நடந்த விழாவில் உத்தவ்தாக்கரே பேசினார்.

மும்பை, 

மும்பை வில்லேபார்லேயில் நடந்த நிகழ்ச்சியில் சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த நாட்டின் தேசிய கொடியை ஏற்ற நீங்கள் விரும்பினால் தேசிய பாடலையும் பாடித்தான் ஆக வேண்டும். தேசிய பாடலை கட்டாயம் பாடவேண்டும் என்பதை சட்டமாக்க வேண்டும். போலியான பெருமைகள் காட்சிப்படுத்தப்பட கூடாது. வந்தே மாதரம் பாடலை கட்டாயம் ஆக்கும் வகையில் கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.

தினமும் பாடவேண்டும்

குடியரசு தினம், சுதந்திர தினம் கொண்டாடுவது மட்டும் தேசப்பற்று அல்ல. தேசப்பற்று நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருக்கவேண்டும். தினமும் தேசப்பாடல் பாடப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும், வந்தே மாதரம் பாடலை பாட மறுப்பவர்கள் குறித்து அவர் பேசும் போது, நீங்கள் வாழும் நாட்டின் தேசப்பாடலை பாட மறுக்கும் நீங்கள் எந்த கொடியை ஏற்றுவீர்கள்?. நம் மண்ணை வணங்க ஏன் மறுக்கிறீர்கள்? என கேள்வி எழுப்பினார். 

Next Story