சுதந்திர தின விழாவில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் சிவஞானம் வழங்கினார்


சுதந்திர தின விழாவில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் சிவஞானம் வழங்கினார்
x
தினத்தந்தி 16 Aug 2017 3:45 AM IST (Updated: 16 Aug 2017 2:50 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் நடந்த சுதந்திரதின விழாவில் கலெக்டர் சிவஞானம் தேசிய கொடியேற்றி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விருதுநகர்,

சுதந்திர தினம் நாடு முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விருதுநகர் சூலக்கரையில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விழா கொண்டாடப்பட்டது. கலெக்டர் சிவஞானம் காலை 8.35 மணிக்கு தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். போலீஸ் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார். தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். மேலும் 63 பேருக்கு ரூ.71 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விருதுநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு லட்சுமணன் உள்பட 61 போலீசாருக்கும், 26 தீயணைப்பு படை வீரர்களுக்கும், 97 அரசு அலுவலர்களுக்கும் சிறந்த சேவைக்கான நற்சான்றிதழை வழங்கினார். தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக விழாவிற்கு வந்த கலெக்டரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், மாவட்ட வருவாய் அதிகாரி முத்துக்குமரன், மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி ஜெயஅருள்பதி ஆகியோர் வரவேற்றனர். பின்னர் சத்திரரெட்டியபட்டி கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்திலும், விருதுநகர் சொக்கநாதசாமி கோவிலில் நடந்த சமபந்தி விருந்திலும் கலெக்டர் கலந்து கொண்டார்.

விருதுநகர் ரெயில் நிலையத்தில் நிலைய அதிகாரி சிவகுருநாதன் தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். விருதுநகர் சத்திரிய மானேஜிங் போர்டுக்கு பாத்தியப்பட்ட பள்ளிகளில் பள்ளி செயலாளர் சபரிமுத்து தலைமையில் அனைத்து பள்ளிகளிலும் விழாகொண்டாடப்பட்டது. கே.வி.எஸ்.மேல்நிலைப்பள்ளியில் முத்துவேல் தலைமையில் இணைச் செயலாளர் வெங்கடேசன் கொடியேற்றி வைத்து மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார். கே.வி.எஸ். நடுநிலைப்பள்ளியில் தியாகராஜன் தலைமையில் உமாபதி கொடியேற்றி வைத்து மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார். திருவள்ளுவர் வித்யாசாலா நடு நிலைப்பள்ளியில் பள்ளி உப தலைவர் சங்கரலிங்கம் கொடியேற்றி வைத்தார். கே.காமராஜ் வித்யாசாலா நடுநிலைப்பள்ளியில் வன்னியானந்தம் கொடியேற்றி வைத்தார். சுப்பிரமணிய வித்யாசாலா ஆரம்ப பள்ளியில் நிர்வாகி தனிக்கொடி தேசிய கொடியேற்றி வைத்து மாணவர் களுக்கு இனிப்பு வழங்கினார். சரஸ்வதி வித்யாசாலா ஆரம்பப்பள்ளியில் ரமேஷ் கொடியேற்றி வைத்தார். பெரிய கருப்ப நாடார் ஆங்கிலப்பள்ளியில் சக்திபாபு கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கினார். சத்திரிய வித்யாசாலா நூற்றாண்டு பள்ளியில் பாண்டியராஜன் கொடியேற்றி வைத்தார்.

விருதுநகர் வன்னியபெருமாள் பெண்கள் கல்லூரியில் விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் மீனாராணி வரவேற்றார். கல்லூரி செயலாளர் ரத்தினவேல் கொடியேற்றி வைத்தார். கல்லூரி தலைவர் மாணிக்கவாசகம், கூட்டுச் செயலர் மைதிலி மாணிக்க வாசகம், பேராசிரியர் வேல்மணி உள்பட பலர் பேசினர். முடிவில் மாணவி பிரியதர்ஷினி நன்றி கூறினார்.

விருதுநகர் அருகே உள்ள சத்திரரெட்டியபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் தலைமை ஆசிரியர் மோகன் வரவேற்புரையாற்றினார். என்.சி.சி. சுபேதார் ஜேம்ஸ் கொடியேற்றி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத்தைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன், பழனிசாமி மற்றும் பலர் பேசினர். முடிவில் வெள்ளையனே வெளியேறு இயக்க விளக்க பேரணி நடைபெற்றது.

விருதுநகர் ஸ்ரீவித்யா கல்வி குழுமத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் நடந்த விழாவில் கல்லூரி சேர்மன் திருவேங்கடராமானுஜதாஸ் கொடியேற்றி வைத்தார். இதில் கல்வி குழுமங்களில் உள்ள முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். விருதுநகர் முத்தமிழ் காலனியில் குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பில் நடந்த விழாவுக்கு யூனியன் முன்னாள் கவுன்சிலர் வேலாயுதம் தலைமை தாங்கினார். கால்நடை பராமரிப்புத்துறை முன்னாள் இணை இயக்குனரும், காலனி தலைவருமான செல்வராஜன் கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து பட்டிமன்றம், விளையாட்டு போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விருதுநகர் மல்லாங்கிணறு சாலையில் உள்ள எஸ்.எப்.எஸ். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவிற்கு டாக்டர் ரத்தினவேல் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் அருள் பிரான்சிஸ் முன்னிலை வகித்தார். சிறப்பாக செயல்பட்ட 180 மாணவ-மாணவிகளுக்கு பள்ளி தாளாளர் மைக்கேல், பொருளாளர் ஜெயராஜ், திருச்சி சந்தானம் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியில் கல்லூரி செயலாளர் சண்முகமூர்த்தி கொடியேற்றி வைத்தார். தேசிய மாணவர் படை, இளைஞர் செஞ் சிலுவை சங்கம் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் 60 பேர் ரத்ததானம் செய்தனர்.

Next Story