நான்கு வழிச்சாலையில் கார் மோதி தொழிலாளி பலி, கிராமமக்கள் மறியல்


நான்கு வழிச்சாலையில் கார் மோதி தொழிலாளி பலி, கிராமமக்கள் மறியல்
x
தினத்தந்தி 16 Aug 2017 3:45 AM IST (Updated: 16 Aug 2017 2:50 AM IST)
t-max-icont-min-icon

நான்கு வழிச்சாலையில் கார் மோதி தொழிலாளி பலி மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காரியாபட்டி,

காரியாபட்டி அருகே வலையங்குளத்தை சேர்ந்தவர் வெயிலான்(வயது 35). கூலித்தொழிலாளியான இவர் வலையங்குளத்தில் இருந்து கல்குறிச்சிக்கு சைக்கிளில் சென்றார். அப்போது அங்குள்ள நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

 இதுகுறித்து தகவலறிந்த வலையங்குளம் கிராம மக்கள் வலையங்குளம்–கல்குறிச்சிக்கு இடையே உள்ள நான்கு வழிச்சாலை பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது. எனவே இந்த பகுதியில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர்.

 இதைதொடர்ந்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். சாலை மறியலால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story