மதுக்கடையை அகற்றக்கோரி தேசிய கொடியுடன் அமர்ந்து பெண்கள் போராட்டம்


மதுக்கடையை அகற்றக்கோரி தேசிய கொடியுடன் அமர்ந்து பெண்கள் போராட்டம்
x
தினத்தந்தி 16 Aug 2017 4:15 AM IST (Updated: 16 Aug 2017 2:55 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி அருகே மதுக் கடையை அகற்றக்கோரி பெண்கள் தேசிய கொடியுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி,

தர்மபுரி அருகே உள்ள மொன்னையன்கொட்டாய் பகுதியில் புதிய மதுக்கடை அமைக்கப்பட்டது. இதற்கு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் இந்த மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து தினமும் அங்கு திரண்ட பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் சுதந்திர தினநாளான நேற்று 7-வது நாளாக மதுக்கடை முன்பு திரண்ட பெண்கள் தேசிய கொடியை கையில் ஏந்தியபடி மதுக்கடையை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கண்காணிப்பு

இதுதொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், சுதந்திர தினவிழா கொண்டாடப்படும் நாளிலும் எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். 7 நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எங்களுக்கு மதிப்பளித்து இந்த மதுக்கடையை உடனடியாக இந்த பகுதியில் இருந்து அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று தெரிவித்தனர்.

போராட்டம் நடத்திய பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

Related Tags :
Next Story