தஞ்சை ரெயில் நிலையத்தில் பிளாட்பார டிக்கெட் ரூ.20 ஆக உயர்வு
தஞ்சையில் இருந்து திருச்சிக்கு செல்ல ரூ.15-ம், கும்பகோணத்திற்கு ரூ.10 கட்டணத்தில் செல்லலாம். ஆனால் அதைவிட கூடுதலாக ரெயில் நிலையத்தில் பிளாட்பார கட்டணம் ரூ.20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ரெயில் நிலையத்துக்கு வருபவர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். இந்த கட்டண உயர்வை வாபஸ்பெற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை ரெயில் நிலையம் மிகவும் பழமை வாய்ந்த ரெயில் நிலையம் ஆகும். தஞ்சை வழியாகத்தான் முன்பு சென்னை, தென்மாவட்டங்களுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தது. பின்னர் திருச்சி- விழுப்புரம் இடையே ரெயில்பாதை அமைக்கப்பட்ட பின்னர் பெரும்பாலான ரெயில்கள் அந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் தஞ்சை வழியாக இயக்கப்படும் ரெயில்களின் எண்ணிக்கை குறைந்தது.
இதையடுத்து தஞ்சை வழியாக முன்பு இயக்கப்பட்ட ரெயில்களைப்போல் மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். தற்போது தஞ்சை வழியாக சென்னை, கோவை, எர்ணாகுளம், ராமேஸ்வரம், திருநெல்வேலி, திருச்செந்தூர், திருப்பதி, காரைக்கால், வாரணாசி, புவனேஸ்வர், அயோத்தி, திருப்பதி உள்ளிட்ட இடங்களுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தஞ்சை வழியாக 18-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களும், 20-க்கும் மேற்பட்ட பயணிகள் ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
கட்டணம் உயர்வு
ரெயில் நிலையங்களுக்குள் செல்வோரும், ரெயிலில் செல்லும் உறவினர்களை வழியனுப்ப வருபவர்களும், ரெயிலில் செல்லும் உறவினர்களை பார்க்க வருபவர்களும் பிளாட்பார டிக்கெட் எடுப்பது வழக்கம். இதற்கான கட்டணம் ரூ.10 ஆக இருந்தது. இந்த நிலையில் பிளாட்பார கட்டணத்தை ரூ.20 ஆக ரெயில்வே நிர்வாகம் நேற்று முதல் செப்டம்பர் 15-ந்தேதி வரை உயர்த்தி உள்ளது.
ரெயில்களில் வயதானவர்கள், உடல் ஊனமுற்றவர்கள் பயணம் செய்யும் போது அவர்களுக்கு உதவுவதற்காக உறவினர்கள் யாராவது வர வேண்டும். ஆனால் அவர்கள் ரூ.20 கட்டணம் செலுத்தி டிக்கெட் எடுத்துச்செல்ல வேண்டி உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
கட்டணத்தை குறைக்க வேண்டும்
தஞ்சையில் இருந்து 60 கி.மீ. தூரம் உள்ள திருச்சிக்கு ரெயிலில் செல்ல ரூ.15-ம், கும்பகோணத்திற்கு செல்ல ரூ.10-ம் கட்டணம் வசூலிக் கப்படுகிறது. ஆனால் ரெயில் நிலையங்களில் 2 மணி நேரத்திற்கு மட்டும் அனுமதிக்கப்படும் பிளாட்பார டிக்கெட் கட்டணம் ரூ.20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தஞ்சை, கும்பகோணம், திருவாரூர், நாகை, வேளாங்கண்ணி ஆகிய 5 ரெயில் நிலையங்களிலும் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
ஆனால் யாரும் பிளாட்பார டிக்கெட் எடுப்பதற்கு முன்வருவதில்லை. உறவினர்களை ரெயிலில் ஏற்ற வருபவர்கள் கூட கும்பகோணத்திற்கோ, அல்லது தஞ்சையை அடுத்த ஆலக்குடிக்கோ செல்வதற்கான கட்டணமான ரூ.10 டிக்கெட் எடுத்துக்கொண்டு செல்கிறார்கள். அவர்கள் தங்கள் உறவினர்களை ஏற்றி விட்டு திரும்பி விடுகிறார்கள். ரூ.10 கட்டணம் இருந்தால் மக்களும் அதனை வாங்குவார்கள். ரூ.20 உயர்த்தப்பட்டுள்ளதால் யாரும் பிளாட்பார டிக்கெட் என்று எடுக்க முன்வருவதில்லை. எனவே இந்த கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஏற்க முடியாது
இது குறித்து ரெயில் பயணிகள் சங்க ஆலோசகர் வக்கீல் ஜீவக்குமார் கூறியதாவது:-
பிளாட்பார டிக்கெட் கட்டணம் ரூ.20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தஞ்சையில் இருந்து திருச்சி செல்வதற்கோ, கும்பகோணம் செல்வதற்கோ அதை விட கட்டணம் குறைவு தான். ரெயில் நிலையங்களில் கூட்டம் வருவதை தவிர்க்கும் வகையில் இந்த கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனை ஏற்க முடியாது. ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்கலாம். அதை விடுத்துவிட்டு கட்டணத்தை உயர்த்தியதை ஏற்க முடியாது. இது சாதாரண மக்களைத்தான் பெரிதும் பாதிக்கும். எனவே பிளாட்பார டிக்கெட் கட்டணத்தை உயர்த்தியதை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்”என்றார்.

Related Tags :
Next Story