வேலூரில் கலெக்டர் தேசிய கொடியேற்றினார் ரூ.11 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன
வேலூரில் நடந்த சுதந்திரதின விழாவில் கலெக்டர் ராமன் தேசிய கொடியேற்றி வைத்து ரூ.11 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
வேலூர்,
இந்தியாவின் 71-வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் கோலாகலமாக நேற்று கொண்டாடப்பட்டது. வேலூரில் நேதாஜி விளையாட்டு அரங்கில் சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட கலெக்டர் ராமன் கலந்து கொண்டு காலை 8-50 மணிக்கு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சமாதான புறாக்களையும், மூவர்ண பலூன்களையும் அவர் வானில் பறக்கவிட்டார்.
அதைத்தொடர்ந்து கலெக்டர் ராமன் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் உடன் இருந்தார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் ஏற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் தியாகிகளை கவுரவிக்கும் வகையில் அவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு சென்று அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, இனிப்பு வழங்கி கலெக்டர் ராமன் கவுரவித்தார்.
அதன்பின்னர் அரசுத்துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்கள் 109 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களும், பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகளும், விளையாட்டு துறையில் சாதனை செய்த 8 வீரர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.
கோவையில் 2016-ம் ஆண்டு நடந்த தேசிய அளவிலான தடகள போட்டியில் தங்க பதக்கம் வென்ற ஒடுகத்தூரை சேர்ந்த ஹேமமாலினி, மாற்றுத்திறனாளிகள் பிரிவில் சீனாவில் நடந்த விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வெங்கடாசலம், வேலூரை சேர்ந்த மற்றொரு மாற்றுத்திறனாளி வீரர் செல்வா ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ்கள், பதக்கங்களை கலெக்டர் வழங்கினார்.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, முன்னாள் படைவீரர் நலத்துறை, வேளாண்துறை, தாட்கோ ஆகிய துறைகளின் மூலம் 25 பயனாளிகளுக்கு ரூ.11 லட்சத்து 6 ஆயிரத்து 195 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ராமன் வழங்கினார்.
அதைத்தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சுதந்திர தினத்தை போற்றும் வகையிலும், தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் வகையிலும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மேலும் நடனம், யோகா போன்ற நிகழ்ச்சியிலும் மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து பள்ளிகளுக்கும் பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன், வேலூர் சரக டி.ஐ.ஜி. வனிதா, ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பெரியசாமி, உதவிகலெக்டர் செல்வராசு, முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், பயிற்சி கலெக்டர் ஸ்ரீகாந்த், தாசில்தார் பாலாஜி உள்பட அனைத்துத்துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
முன்னதாக கோட்டை முன்புள்ள காந்தி சிலைக்கு கலெக்டர் ராமன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் கோட்டை கொத்தளத்திலும் அவர் தேசிய கொடியேற்றி வைத்தார்.
இதேபோல் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த சுதந்திர தினவிழாவில் கமிஷனர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியம் தேசிய கொடியேற்றினார். இதில் மண்டல அலுவலர்கள், மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் அரசு அலுவலகங்களில் தேசியகொடி ஏற்றப்பட்டன.

Related Tags :
Next Story