புதிதாக கட்டிய தரைப்பாலத்தை காட்டாற்று வெள்ளம் அடித்து சென்றது


புதிதாக கட்டிய தரைப்பாலத்தை காட்டாற்று வெள்ளம் அடித்து சென்றது
x
தினத்தந்தி 16 Aug 2017 4:45 AM IST (Updated: 16 Aug 2017 2:59 AM IST)
t-max-icont-min-icon

புதிதாக கட்டப்பட்ட தரைப்பாலம் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

திருச்சி,

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம், தளுகை ஊராட்சிக்குட்பட்ட பாதர்பேட்டை கிராமத்திற்கு, துறையூர் தம்மம்பட்டி சாலை பிரிவு ரோட்டிலிருந்து, ஊருக்கு செல்லும் பாதையின் குறுக்கே காட்டாறு செல்கிறது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழையின் காரணமாக செங்கட்டு என்ற பகுதியில் இருந்து த.மங்கப்பட்டி வழியாக நாகநல்லூர் கிராமத்திற்கு காட்டாற்று வெள்ளம் வந்து கொண்டிருந்தது.

இந்த வெள்ளம் முருகன் கோவில் அருகே 6 மாதத்திற்கு முன்பு கட்டப்பட்ட தரைப்பாலத்தை முழுவதுமாக நேற்று முன்தினம் மாலை அடித்து சென்றது. இதில் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் அந்த பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பிரிவு ரோட்டில் இருந்து, இறங்கி ஊருக்கு செல்லும் பொது மக்கள் வெகுநேரமாக செல்ல முடியாமல் தவித்தனர்.

சாதாரண மழைக்கே புதிதாக கட்டப்பட்ட பாலம் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டதால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

Related Tags :
Next Story