பா.ஜனதா ஆட்சியில் விலைவாசி பல மடங்கு உயர்ந்து விட்டது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு


பா.ஜனதா ஆட்சியில் விலைவாசி பல மடங்கு உயர்ந்து விட்டது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 16 Aug 2017 4:15 AM IST (Updated: 16 Aug 2017 3:00 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா ஆட்சியில் விலைவாசி பல மடங்கு உயர்ந்து விட்டது என்று முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் குற்றம்சாட்டினார்.

திருமயம்,

திருமயத்தில், வட்டார, நகர காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ் தலைமை தாங்கினார். தமிழக சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர் ராமசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-

சுதந்திரம் வாங்கிய காலத்தில் இருந்து இதுநாள் வரை காங்கிரஸ் கட்சி எந்த தவறையும் செய்தது கிடையாது. பா.ஜனதா ஆட்சியில் இன்றைக்கு இந்தியா முழுவதும் விலைவாசி கடுமையாக உயர்ந்து விட்டது. இந்த விலை உயர்வு மக்களை வாட்டி வதைத்து வருகிறது. தமிழக அரசு செயல்படாத அரசாக உள்ளது. மத்திய, மாநில அரசுகள் பல தவறுகளை தொடர்ந்து செய்து வருகின்றன. அந்த தவறுகளை இளைஞர் காங்கிரசார் மற்றும் தொண்டர்கள் பொதுமக்களிடையே எடுத்து கூற வேண்டும்.

மணிமண்டபம்

கிராம காங்கிரஸ் கமிட்டி, வட்டார நிர்வாகிகள் சுற்றுப்பயணம் செய்து காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் வட்டார தலைவர்கள் அழகு ராமச்சந்திரன்(தெற்கு), முருகேசன்(வடக்கு), மாவட்ட துணைத் தலைவர் ராமையா, மாவட்ட பொது செயலாளர்கள் அக்பர்அலி, மாயாண்டி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக திருமயம் தீரர் சத்திய மூர்த்தி நினைவு மணிமண்டபத்தை ப.சிதம்பரம் பார்வையிட்டார். 

Related Tags :
Next Story