கடலில் மூழ்கி சென்னையை சேர்ந்தவர் உள்பட 2 பேர் சாவு
கடலில் மூழ்கி சென்னையை சேர்ந்தவர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
மாமல்லபுரம்,
சென்னை சேலையூரை சேர்ந்தவர் முகமதுசலீம் (வயது 36). இவர் தன்னுடைய நண்பருடன் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா சென்றார். கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கினார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவ்வாறு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார்.
மற்றொருவர்
சேலத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் கார்த்திக் (17). ஸ்டவ் பழுது பார்க்கும் தொழில் செய்து வந்தார். இவர் குடும்பத்தினருடன் சேலத்தில் இருந்து மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தார். கடற்கரை கோவில் அருகில் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி இறந்தார்.
பின்னர் அவரது உடல் புதுகல்பாக்கம் அருகில் உள்ள கடற்கரையில் கரை ஒதுங்கியது. இந்த இரு சம்பவங்கள் குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story