கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Aug 2017 3:00 AM IST (Updated: 16 Aug 2017 8:29 PM IST)
t-max-icont-min-icon

போளூர் தபால் அலுவலகம் முன்பு அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

போளூர்,

போளூர் தபால் அலுவலகம் முன்பு அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். கோட்ட தலைவர் தேவபாலன் தலைமை தாங்கினார். செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் 7–வது ஊதியக்குழு தலைவரின் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று கோ‌ஷங்களை எழுப்பினர். இதில் மாருதி, திருநாவுக்கரசு, ருத்ரகோட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். இவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்திலும் கலந்து கொண்டுள்ளனர்.

இதேபோல் திருவண்ணாமலை தலைமை தபால் நிலையம் முன்பு கிராம அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் மாவட்டம் முழுவதும் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.


Next Story