நாகர்கோவிலில் கிராமிய தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


நாகர்கோவிலில் கிராமிய தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 Aug 2017 10:45 PM GMT (Updated: 2017-08-16T23:05:13+05:30)

கிராமிய தபால் ஊழியர்களுக்கு 8 மணி நேர வேலை வழங்கி இலாகா ஊழியராக்க வேண்டும், மத்திய நிர்வாக தீர்ப்பாயமும், சென்னை நிர்வாக தீர்ப்பாயமும் வழங்கிய தீர்ப்பின்படி ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய கிராமிய தபால ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில்,

கிராமிய தபால் ஊழியர்களுக்கு 8 மணி நேர வேலை வழங்கி இலாகா ஊழியராக்க வேண்டும், மத்திய நிர்வாக தீர்ப்பாயமும், சென்னை நிர்வாக தீர்ப்பாயமும் வழங்கிய தீர்ப்பின்படி ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய கிராமிய தபால் ஊழியர் சங்க குமரி கோட்டம் சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது.

இதுபற்றி சங்க மாவட்ட தலைவர் சுகுமாரனிடம் கேட்டபோது, ‘எங்களது கோரிக்கைகளை பலமுறை அரசிடம் கூறிவிட்டோம். ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து கோரிக்கைகள் நிறைவேறும் வரை காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று முதல் (அதாவது நேற்று) வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். குமரி மாவட்டத்தில் 130 கிராமிய தபால் நிலையங்கள் உள்ளன. இதில் சுமார் 500 பேர் பணியாற்றுகிறார்கள். இவர்களில் 410 பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை கைவிடப்போவது இல்லை‘ என்றார்.

முன்னதாக அனைத்திந்திய கிராமிய தபால் ஊழியர் சங்க குமரி கோட்டம் சார்பில் நாகர்கோவிலில் உள்ள தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சுகுமாரன் தலைமை தாங்கினார். செயலாளர் சுபாஷ், இஸ்மாயில் உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.


Next Story