கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள்-அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள்-அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Aug 2017 4:15 AM IST (Updated: 17 Aug 2017 1:20 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள்- அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கரூர்,

விவசாயிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகளையும், விவசாயத்தை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்கம் மற்றும் அரசியல் கட்சியினர், விவசாய சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

கரூரில் தாசில்தார் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மற்றும் அக்கட்சியின் தோழமை கட்சிகளும், பிற கட்சியினரும் திரளாக கலந்து கொள்ள ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் குவித்தனர்.

கோஷம்

ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகி ராஜ்குமார், இந்திய விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகி அன்பழகன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை தொடர்பாக கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் புதுச்சேரி மாநில தேர்தல் பொறுப்பாளர் பேங்க் சுப்ரமணியன், மாவட்ட தலைவர் சின்னச்சாமி மற்றும் திராவிடர் கழகம், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி, விவசாய தொழிலாளர் கட்சி, சமத்துவ மக்கள் கழகம், தமிழக வாழ்வுரிமை கட்சி, எம்.ஜி.ஆர். கழகம், ஆதித்தமிழர் பேரவை ஆகிய கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள், விவசாய சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தி.மு.க. மாவட்ட விவசாய அணி செயலாளர் ராமலிங்கம் நன்றி கூறினார். 

Next Story