பொதுமக்களிடம் கோரிக்கை மனு முதல்-அமைச்சர் பெற்றுக்கொண்டார்


பொதுமக்களிடம் கோரிக்கை மனு முதல்-அமைச்சர் பெற்றுக்கொண்டார்
x
தினத்தந்தி 17 Aug 2017 3:30 AM IST (Updated: 17 Aug 2017 1:33 AM IST)
t-max-icont-min-icon

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள சென்ற முதல்-அமைச்சர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

மாமல்லபுரம், 

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள நேற்று கிழக்கு கடற்கரை சாலை வழியாக கடலூருக்கு செல்லும் வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாமல்லபுரம் வருகை தந்தார். மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகம் அருகில் எம்.ஜி.ஆர். பட திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு அ.தி.மு.க. நகர செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் எஸ்.ஆறுமுகம், மாவட்ட துணை செயலாளர் பி.ஏ.எஸ்வந்தராவ் முன்னிலை வகித்தனர். அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர். படத்தை திறந்து வைத்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் முதல்-அமைச்சர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் எம்.பி. மரகதம்குமரவேல், திருப்போரூர் எம்.எல்.ஏ. எம்.கோதண்டபாணி, அ.தி.மு.க. நிர்வாகிகள் வீராசாமி, பக்தவச்சலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதே போன்று கல்பாக்கத்திலும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். 

Next Story