ஜோத்தியம்பட்டி பகுதியில் குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் கலெக்டரிடம் மனு


ஜோத்தியம்பட்டி பகுதியில் குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 17 Aug 2017 4:00 AM IST (Updated: 17 Aug 2017 3:07 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டம் ஜோத்தியம்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கலெக்டர் கே.எஸ்.பழனிசாமியிடம் மனு கொடுத்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஒன்றியம் ஜோத்தியம்பட்டி பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் நேற்றுகாலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கலெக்டர் கே.எஸ்.பழனிசாமியிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருப்பதாவது:–

எங்கள் பகுதியில் 150–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடியிருந்து வருகிறோம். ஆழ்குழாய் கிணறுகள் மூலமாக நாங்கள் குடிநீர் பெற்று பயன்படுத்தி வந்தோம். இந்த நிலையில் ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் இல்லாததால் கடந்த 4 மாதங்களாக எங்களுக்கு கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 1 குடம் தண்ணீரை ரூ.7–க்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம். தற்போது எங்களுக்கு போதுமான வேலைவாய்ப்பு இல்லாததால் பணம் கொடுத்து குடிநீர் பிடிக்க முடியாமல் சிரமம் அடைந்து வருகிறோம். எனவே எங்கள் பகுதியில் குடிநீர் வசதியை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.


Next Story