டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு


டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 21 Aug 2017 11:00 PM GMT (Updated: 21 Aug 2017 7:02 PM GMT)

கீழ்அணைக்கரையில் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று குறை தீர்வு நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமை தாங்கி னார். தரைதளத்தில் மாற்றுத் திறனாளிகளிடமும், மேல் தளத்தில் பொதுமக்களிடமும் கலெக்டர் மனு பெற்றார்.

இதில் முதியோர் உதவித் தொகை, விதவைகள் உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, ரேஷன் அட்டை உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 300-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதி காரிகளுக்கு கலெக்டர் உத்தர விட்டார். மேலும் நிலுவையில் உள்ள மனுக்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பணிபுரியும் கொசுப்புழு ஒழிப்பு களப் பணியாளர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்ப தாவது:-

நாங்கள் கடந்த 6 ஆண்டு களுக்கு மேலாக இந்த வேலை செய்து வருகிறோம். எங்க ளுக்கு தினமும் ஊதியமாக ரூ.256 வழங்கி வருகின்றனர். இந்த ஊதியமானது எங்க ளுக்கும், எங்கள் குடும்பத்தை நடத்தவும் போதுமானதாக இல்லை. அதுமட்டுமின்றி மற்ற மாவட்டங்களில் ரூ.320 முதல் ரூ.380 வரை ஊதியம் தருவதாக கேள்விப்பட்டு பலமுறை மனுக்கள் கொடுத்து இருக்கிறோம்.

ஆனால் இன்று வரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. இந்த ஊதியமானது எங்களது வாழ்க்கைக்கு போதுமானதாக இல்லாத தால், நாங்கள் பல துன்பங் களுக்கு ஆளாகி வருகிறோம். எனவே, எங்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அருகே பறையம்பட்டு பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் கொடுத்த மனுவில் கூறியிருப்ப தாவது:-

எனது வீடு கடந்த ஜனவரி 1-ந் தேதியன்று எரிந்து விட்டது. இதுகுறித்து கலெக்ட ரிடம் மனு அளித்தேன். அதன் மூலமாக பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு, வீடு கட்ட இருந்தேன். எங்கள் ஊராட்சியை சேர்ந்த அதிகாரி ஒருவர் ரூ.30 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தால் தான் வீடு கட்டித் தருவேன் என்று கூறுகிறார். இதுகுறித்து நான் திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளித்தும், எந்தவித நடவடிக் கையும் இல்லை. இதையடுத்து கடந்த 7-ந் தேதி உங்களிடம் மனு கொடுத்தேன். இதை யறிந்த அந்த அதிகாரியின் மகன், எனது அப்பாவை இரவில் கல்லை போட்டு கொன்று விடுவேன் என்று கூறினார். இதனால் எனக்கும், எனது குடும்பத்திற்கும் இரவில் தூக்கமே இல்லை. எனவே, இதுகுறித்து நட வடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை கீழ்அணைக்கரை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்ப தாவது:-

எங்கள் பகுதியில் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு எங்கள் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் குடிபோதையில் வருவோர் பெண்களை தவறாக பார்க்கின்றனர்.

இதனால் எங்கள் பகுதி பெண்கள் அச்சம் அடைந்துள் ளனர். எனவே எங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும். அகற்றவில்லை என்றால் போராட்டங்களில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தண்டராம்பட்டு தாலுகா பெருங்குளத்தூர் பகுதியை சேர்ந்த மக்கள் கொடுத்த மனுவில் ‘எங்கள் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங் கள் உள்ளன. தற்போது டாஸ்மாக் கடை அமைப்ப தற்காக புதிதாக கடை கட்டப்பட்டு வருகிறது. எங்கள் பகுதியில் பள்ளி கூடம், ஆரம்ப சுகாதார நிலையம் போன்றவை உள்ளது. எனவே, எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கக் கூடாது. டாஸ்மாக் கடை அமைத்தால் போராட்டத்தில் ஈடுபடுவோம்’ என்று கூறப்பட்டுள்ளது. 

Next Story