மனைவி கள்ளக்காதலனுடன் சென்றதால், தொழிலாளி வி‌ஷம் குடித்து தற்கொலை


மனைவி கள்ளக்காதலனுடன் சென்றதால், தொழிலாளி வி‌ஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 22 Aug 2017 12:00 AM GMT (Updated: 2017-08-22T03:09:02+05:30)

சாத்தான்குளத்தில் மனைவி கள்ளக்காதலனுடன் சென்றதால், தொழிலாளி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தொழிலாளி தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காந்தி நகரைச் சேர்ந்தவர் முனியாண்டி (வயது 39). இவர் மகராஷ்டிரா மாநிலத்தில் கடலைமிட்டாய் கம்பெனியில் தொழிலா

சாத்தான்குளம்,

சாத்தான்குளத்தில் மனைவி கள்ளக்காதலனுடன் சென்றதால், தொழிலாளி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காந்தி நகரைச் சேர்ந்தவர் முனியாண்டி (வயது 39). இவர் மகராஷ்டிரா மாநிலத்தில் கடலைமிட்டாய் கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி முத்துகனி. இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். முத்துகனி தன்னுடைய குழந்தைகளுடன் சாத்தான்குளம் காந்தி நகரில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் முத்துகனிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பந்தல் அமைக்கும் தொழிலாளியான சின்னத்துரைக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. சின்னத்துரைக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். ஆனாலும் சின்னத்துரை, முத்துகனி ஆகிய 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து, உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு சின்னத்துரையும், முத்துகனியும் ஊரை விட்டு வெளியேறி, வெளியூருக்கு சென்று விட்டனர். முத்துகனி கள்ளக்காதலனுடன் சென்றது குறித்து உறவினர்கள் முனியாண்டிக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் நேற்று முன்தினம் முனியாண்டி தனது சொந்த ஊருக்கு சென்று, தன்னுடைய குழந்தைகளை பார்த்தார். அவர் தன்னுடைய மனைவி, கள்ளக்காதலனுடன் சென்றதை அறிந்து மனவேதனையில் இருந்தார்.

இரவில் முனியாண்டி தனது வீட்டில் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலையில் முனியாண்டி வாயில் நுரை தள்ளிய நிலையில் பிணமாக கிடந்ததைப் பார்த்த அவருடைய குழந்தைகள் அலறினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், சாத்தான்குளம் போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் மீனாகுமாரி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தற்கொலை செய்த முனியாண்டியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை செய்த முனியாண்டியின் சொந்த ஊர், மெஞ்ஞானபுரம் அருகே உள்ள செம்மறிக்குளத்தை அடுத்த திருப்பணி ஆகும். இவர் தன்னுடைய அக்காள் மகளை திருமணம் செய்து இருந்தார். திருமணத்துக்கு பின்னர் முனியாண்டி தன்னுடைய மனைவியின் ஊரில் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story