கர்நாடகம் மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசு அனுமதிக்க கூடாது ஜி.கே.வாசன் பேட்டி

கர்நாடகம் மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசு அனுமதிக்க கூடாது என ஜி.கே.வாசன் கூறினார்.
கும்பகோணம்,
கர்நாடக அரசு மேகதாதுவில் புதிதாக அணை கட்டுவதற்கு முயற்சி எடுத்து வருகிறது. இதற்கு உச்சநீதிமன்றமும் ஒரு ஆலோசனையை கூறியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் வக்கீல்கள் கூறியுள்ள கருத்து ஏற்புடையதல்ல. மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட ஒருபோதும் தமிழக அரசு அனுமதிக்க கூடாது.
காவிரி டெல்டாவில் தொடர்ந்து 6 ஆண்டுகளாக குறுவை சாகுபடி பொய்த்து விட்டது. இந்த ஆண்டு சம்பா சாகுபடி பணிகளும் தொடங்கவில்லை. விவசாயிகள் சாகுபடி பணியை தொடங்க ஏதுவாக தமிழக அரசு உரிய நிதி உதவிகளை வழங்க வேண்டும்.
அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைந்துள்ளது வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் காவிரி, பாலாறு, ஹைட்ரோ கார்பன், நீட்தேர்வு உள்ளிட்ட பிரச்சினைகளில் தனிக்கவனம் செலுத்தி தீர்த்து வைக்க வேண்டும். தமிழக அரசு மத்திய அரசிடம் இருந்து தமிழக மக்களுக்கு தேவையான திட்டங்களை பெற்றுதர வேண்டும். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மக்களும் பயன் பெறும் வகையில் எய்ம்ஸ் மருத்துவமனையை உடனடியாக அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் ஒத்த கருத்துடைய கட்சியோடு கூட்டணி வைப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story