செவிலியர் கூட்டமைப்பினர் உண்ணாவிரத போராட்டம்


செவிலியர் கூட்டமைப்பினர் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 22 Aug 2017 10:30 PM GMT (Updated: 2017-08-23T03:29:46+05:30)

செவிலியர் கூட்டமைப்பினர் உண்ணாவிரத போராட்டம்

புதுக்கோட்டை,

தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத்துறை கிராம பகுதி, சமுதாய செவிலியர்கள் கூட்டமைப்பின் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை சுகாதார துணை இயக்குனர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் கீதா தலைமை தாங்கினார். மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய சுகாதார மையங்களை ஏற்படுத்த வேண்டும், சமுதாய செவிலியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் மற்றும் படிகள் வழங்க வேண்டும், துணை சுகாதார மையங்களுக்கு இலவச குடியிருப்பு மற்றும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும், கிராம சுகாதார செவிலியர்களின் பணி சுமையை குறைப்பதுடன், தேவையற்ற பதிவேடுகளின் பராமரிப்பை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. 

Related Tags :
Next Story