வேலூர் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டம்


வேலூர் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டம்
x
தினத்தந்தி 22 Aug 2017 11:00 PM GMT (Updated: 2017-08-23T03:30:29+05:30)

வேலூர் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரக்கோணம்,

தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் (ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர்) நேற்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அரக்கோணம் தாலுகா அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்துக்கு ஏ.தேவராஜன் தலைமை தாங்கினார். ஆர்.புண்ணியகோட்டி, எஸ்.சிவராமன், கென்னடி, மணி, தாமு, பிரின்ஸ்தேவாசீர்வாதம் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். எபிநேசன் வரவேற்றார்.

போராட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டம் தொடர அரசாணை கொண்டு வர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதில் பாக்கியராஜ், கோவிந்தசாமி, அமர்நாத், வாசு, பிரபாகரன், ஆனந்தன் மற்றும் அரசு ஊழியர் அமைப்பு நிர்வாகிகள், ஆசிரியர் அமைப்பு நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அரக்கோணம் அரசு மருத்துவமனை கண் பரிசோதகர் பார்த்திபன் நன்றி கூறினார்.

ஆம்பூரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வில்பிரட் தலைமை தாங்கினார். தயாளன், தாமோதரன், ரமேஷ் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். இதில் ரவிச்சந்திரன், தமிழரசன், குமரகுருபாரதி, யாழன் ஆதி, வக்கீல் சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஞானசேகரன், கோபிநாதன், நேரு ஆகியோர் தலைமை தாங்கினர்.

ஆர்ப்பாட்டத்தில் 52 சங்கங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

குடியாத்தம் தாலுகா அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு நிர்வாகிகள் கே.இளம்பரிதி, எஸ்.ஜோதிபாஸ்கரன் ஆகியோர் தலைமை தாங்கினர். டி.மலர்விழி வரவேற்றார்.

எஸ்.நித்யானந்தம், ஆர்.சவுந்தர், எம்.ஜெயராஜ், பொன்.தசரதன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். முடிவில் ஆசிரியர் பி.சுமதி நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், சத்துணவு பணியாளர்கள் என பல்வேறு சங்கங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகம் முன்பு ஜாக்டோ, ஜியோ கூட்டமைப்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 300-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

பனப்பாக்கம் அருகே உள்ள நெமிலி பஸ் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு நெமிலி வட்ட ஒருங்கிணைப்பாளர் சிவராஜ் தலைமை தாங்கினார். புவியரசு.முருகன், விநாயகம், வர்கீஸ் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். மணிவண்ணன் வரவேற்றார்.

இதில் திருநாவுக்கரசு, அருள்ஜோதி, ரஜினிகுமார், தாமு, பாக்கியராஜ், சவுந்தர், வேதையா, சிவராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சண்முகம் நன்றி கூறினார். இதில் 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

அணைக்கட்டு தாலுகாவில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நேற்று அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

ஆற்காடு தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஸ்ரீதர், ரவி, வெங்கடேசன், பிரேமானந்த் ஆகியோர் தலைமை தாங்கினர். தாண்டவராயன், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில உயர் மட்டக்குழு உறுப்பினர் சி.சேகர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆற்காடு வட்டார தலைவர் முனிரத்தினம் நன்றி கூறினார்.

வாலாஜாவில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் யோசுவா, வினோத்கண்ணா, செல்வகுமார், சுரேஷ் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நடராஜன் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story