தென்காசி உதவி கலெக்டர் அலுவலகத்தில் இந்து முன்னணியினர் முற்றுகை


தென்காசி உதவி கலெக்டர் அலுவலகத்தில் இந்து முன்னணியினர் முற்றுகை
x
தினத்தந்தி 22 Aug 2017 10:45 PM GMT (Updated: 2017-08-23T03:31:40+05:30)

தென்காசி உதவி கலெக்டர் அலுவலகத்தில் இந்து முன்னணியினர் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.

தென்காசி,

தென்காசி உதவி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் காவல் துறை சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதற்கு கண்டனம் தெரிவித்தும், கடந்த ஆண்டை போல் விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்துவதற்கு அனுமதி கேட்டும் இந்து முன்னணியினர் நேற்று காலையில் தென்காசி உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு கோரிக்கை மனுவுடன் சென்றனர்.

அப்போது, அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் உதவி கலெக்டர் அலுவலகம் பூட்டப்பட்டு இருந்தது. உடனே இந்து முன்னணியினர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.

செங்கோட்டை நகர இந்து முன்னணி தலைவர் வர்மா தங்கராஜ் தலைமை தாங்கினார். வக்கீல் அணி மாவட்ட தலைவர் சாக்ரடீஸ், பா.ஜ.க தென்காசி நகர தலைவர் திருநாவுக்கரசு, செங்கோட்டை நகர தலைவர் மாரியப்பன் மற்றும் இந்து முன்னணி, பா.ஜ.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மனு கொடுப்பது குறித்து அவர்கள் உதவி கலெக்டரை தொடர்பு கொண்டனர். உதவி கலெக்டர் ராஜேந்திரன், தான் வெளியில் இருப்பதாகவும் மனுவை வாட்ஸ் அப்பில் அனுப்புமாறும் கூறினார். அதை தொடர்ந்து அவருக்கு வாட்ஸ் அப்பில் மனு அனுப்பப்பட்டது.


Related Tags :
Next Story