கிராமிய தபால் ஊழியர்கள் தட்டு ஏந்தி போராட்டம்


கிராமிய தபால் ஊழியர்கள் தட்டு ஏந்தி போராட்டம்
x
தினத்தந்தி 22 Aug 2017 10:45 PM GMT (Updated: 2017-08-23T03:32:36+05:30)

கிராமிய தபால் ஊழியர்கள் தட்டு ஏந்தி போராட்டம்

நாகர்கோவில்,

கிராமிய தபால் ஊழியர்களுக்கு அமைக்கப்பட்ட கமலேஷ் சந்திரா கமிட்டியின் சாதகமான பரிந்துரைகளை உடனே அமல்படுத்த வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய கிராமிய தபால் ஊழியர் சங்க குமரி கோட்டம் சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் கடந்த 16–ந் தேதி முதல் நடந்து வருகிறது. இந்த போராட்டம் நேற்று 7–வது நாளாக தொடர்ந்தது.

இதையொட்டி நாகர்கோவில் தலைமை தபால் நிலைய அலுவலக வளாகத்தில் கிராமிய தபால் ஊழியர்கள் தட்டு ஏந்தி போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு சங்க தலைவர் சுகுமாரன் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story