விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலைமறியல்


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலைமறியல்
x
தினத்தந்தி 22 Aug 2017 10:45 PM GMT (Updated: 2017-08-23T03:37:16+05:30)

ஓமலூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலைமறியல்

ஓமலூர்,

ஓமலூரை அடுத்த தொளசம்பட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி கம்பத்தை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். நேற்று காலை இதனை பார்த்த விடுதலை சிறுத்தைகள் கட்சி முகாம் செயலாளர் செந்தில், கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து இளம் சிறுத்தைகள் எழுச்சி பாசறை செயலாளர் சாமுராய் குரு , ஒன்றிய செயலாளர் மாதையன், மணிமாறன் மற்றும் கட்சி நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி கம்பத்தை சேதப்படுத்தியவர்களை கைது செய்யக்கோரி கோஷமிட்டனர். பின்னர் தொளசம்பட்டி - 5 வது மைல் ரோட்டில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் தாரமங்கலம் இன்ஸ்பெக்டர் குமரன் மற்றும் தொளசம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, புகார் கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் பாவேந்தன், மாவட்ட செயலாளர் வசந்த், மற்றும் கட்சி நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு சென்று சாலைமறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தொளசம்பட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி முகாம் செயலாளர் செந்தில் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் தொளசம்பட்டியைச் சேர்ந்த குமார் மற்றும் இரண்டு பேரிடம் விசாரணை நடத்தினர். 

Related Tags :
Next Story