குடும்பத்தினரிடம் அமைச்சர்கள் விலை பேசுகிறார்கள் தங்க தமிழ் செல்வன் எம்.எல்.ஏ. புகார்


குடும்பத்தினரிடம் அமைச்சர்கள் விலை பேசுகிறார்கள் தங்க தமிழ் செல்வன் எம்.எல்.ஏ. புகார்
x
தினத்தந்தி 31 Aug 2017 5:00 AM IST (Updated: 31 Aug 2017 2:01 AM IST)
t-max-icont-min-icon

அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி இருவரும், எங்களை அவர்கள் பக்கம் இழுக்க எங்கள் குடும்பத்தாரிடம் விலைபேசி வருகின்றனர் என தங்க தமிழ்செல்வன் எம்.எல்.ஏ. பேட்டி அளித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுவையில் தங்கி இருந்த போது தங்க தமிழ்செல்வன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–

அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி இருவரும், எங்களை அவர்கள் பக்கம் இழுக்க எங்கள் குடும்பத்தாரிடம் விலைபேசி வருகின்றனர். அதற்கெல்லாம் நாங்கள் அடிபணிய மாட்டோம். நாங்கள் யாரையும் விலைபேசவில்லை. அப்படி விலைபேசினால் 100க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் எங்களிடம் இருந்திருப்பார்கள். எங்கள் ஒற்றுமையை கண்டு அவர்கள் மிரண்டு போய் உள்ளனர். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அவரின் கோரிக்கை நியாயமானது தான். 2 நாட்களில் கவர்னர் எங்களை அழைக்க வேண்டும். இல்லை என்றால், நாங்கள் டெல்லி சென்று ஜனாதிபதியை சந்திப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story